-
மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்ல ஜீப், லாரி, கப்பல், விமானம் போன்ற வாகனங்களுக்கு அவசியம் டீசல், பெட்ரோல் அபரிமிதமாகத் தேவைப்படுகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களிலிருந்து, அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்யும் பெட்ரோலியப் பொருட்கள் வரை விலை ஏற்றம் கட்டுக்கடங்காமல் நிகழ்ந்து வருகிறது!
இந்த விலை ஏற்றத்தால் சாதாரண நடுத்தர மக்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களும் மிகுந்த சிரமத்துக்கும் பாதிப்புக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த விலைவாசி ஏற்றத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பெட்ரோலுக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், அந்த மாற்று எரிபொருள் பெட்ரோலின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், பெட்ரோலில் இயங்கிய எந்திரங்களின் அமைப்பையும் மாற்றாமல், அதே கட்டுமானத்தில் உபயோகிக்கும் அளவுக்கு அந்த மாற்று எரிபொருள் இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா?
பெட்ரோலின் உற்பத்தி குறைந்ததற்கு என்ன காரணம்? பெட்ரோலை மையமாக வைத்து மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தால் அதில் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? அமெரிக்கா, அரபு நாடுகளைத் தாக்குவதன் பின்னணியில் பெட்ரோலின் அரசியல் என்ன? பெட்ரோல் எரிப்பு புகையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை எப்படித் தடுப்பது?
இப்படி, தீராத விவாத்ததுக்கு உள்ளாகியிருக்கும் இந்தப் பெட்ரோலின் ஆதி என்ன? அந்தம் என்ன? - பெட்ரோலின் அரசியல் வரலாற்றுப் பின்னணியோடு அலசுகிறார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ்.
விறுவிறுப்பான நடையில், ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்த 'பெட்ரோலின் கதை' இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இது அனைவரும் வாசிக்க வேண்டிய 'பெட்ரோலின் அரசியல்' பற்றிய நூல்.
- ஆசிரியர்
-
This book Petrolin Kathai is written by G.S.S and published by Vikatan Prasuram.
இந்த நூல் பெட்ரோலின் கதை, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Petrolin Kathai, பெட்ரோலின் கதை, ஜி.எஸ்.எஸ்., G.S.S, Kathaigal - Tamil story, கதைகள் , G.S.S Kathaigal - Tamil story,ஜி.எஸ்.எஸ். கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Petrolin Kathai tamil book.
|