-
நீங்கள் எப்போதாவது உங்கள் மனத்தையே உள் முகமாகத் திருப்பிப் பார்த்திருக்கிறீர்களா ? இன்பத்தில் திளைத்திருக்கும போதும் துன்பத்தில் துவண்டிருக்கும் போதும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களின் போக்குகளைக் கவனித்திருக்கிறீர்களா? மனம் எப்போதும் சலனம் உடையதாகவேயிருக்கிறது. அதில் தோன்றும் எண்ணங்கள் சதா காலமும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்களுக்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்த்திற்கும் தாவிக் கொண்டிருக்கும் மனத்தை நிழ்காலத்திலேயே நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஒரு போதும் அகலாத ஆனந்தத்தை அனுபவிக்கலாம். ஆனால் மனத்தை நிகழ்காலத்தில் நிறுத்துவது என்பது எல்லோருக்கும் சுலபமான காரியமல்ல. நித்தியமான, நிலைத்த, பரிபூரண சுகம் நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளது. அதுவே உண்மையான சுகம். எதையாவது உபதேசிப்பதற்கோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்கோ இந்நூல் எழுதப்படவில்லை. இந்நூல் , உங்களை நீங்களே உணர்ந்து கொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவும். அவ்வளவுதான்.
அன்பன்.பத்மதேவன்.
-
This book Intha Kanathil Vaazhungal is written by Kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Intha Kanathil Vaazhungal, இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், Kavignar Padmadevan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Kavignar Padmadevan Suya Munnetram,கவிஞர் பத்மதேவன் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Intha Kanathil Vaazhungal tamil book.
|