book

அன்பிற் சிறந்த தவமில்லை.....

Anbir Sirantha Thavamillai..

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :7
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

உலகின் பிற பாகங்களில் நாகரிகம் மெல்ல எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலக சகோதரத்துவம் பற்றிய மிகச் சரியான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் நம் தமிழினம்.  சங்க காலம் தமிழினத்தின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. பசி இல்லாகுக' பிணி சேண்நீங்குக;  வேந்து பகை தணிக; ஆண்டு  பல நந்துக; அறம் நனி சிறக்க; அல்லது கெடுக' என்னம் 'ஜங்குறுநூறு ' காட்டும் தலைவியின் பண்பாட்டுப் பார்வை நம் ஆழ்ந்த சிநிதனைக்குரியது. பசியும் பிணியுமின்றி  வாழ்தல், யாரொடும் பகையின்றி  வாழ்தல்,  அறம் சிறக்க வாழ்தல் என்ற மூன்று கொள்கைகளே பண்டைத் தமிழரின் வாழ்வியல் கொள்கைகளாகும். அறவுணர்வும், அன்பு - அருள் என்னும் பண்பு நலன்களும் பழந்தமிழர் பண்பாட்டின் அடித்தளங்களாகும். சபிக்கப்பட்ட சமூக வாழ்க்கையில் உயிர்களனைத்தும் உருகித் தவமிருப்பது அன்பெனும் வரத்தைப் பெறுவதற்காகவே, சகலவிதமான மனத்தின் தன்னவமற்ற அன்பின் தன்மையை விளக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.

                                                                                                                                                       - பதிப்பகம்.