-
' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்.' உலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில் நம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி. வறுமை. நோய், சமூக அமைப்பு, பிரிட்டிஷ் அடக்கு முறை, சொந்த மக்களின் சுயநல சோம்பல் வாழ்க்கை முறை, ஜாதியச் சிந்தனை, அறியாமையின் அராஜகம், இவை எல்லாம் பாரதியைப் பாடாய்ப் படுத்திய துயரங்கள் இத்தனைக்கு மத்தியிலும் துயரங்களைத் தூசுதட்டி விட்டு 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று எழுச்சியுடன் எழுந்து நின்றவர் மகாகவி பாரதி. அவரது தமிழ் எளிமையானதுதான் என்றாலும் ஆழமானது. ஆழமான நதியின் தெளிவு போன்றது பாராதியின் தெளிவு. சின்னப் பிள்ளைகள் படிக்க வேண்டிய ஆத்திசூடியே இன்னமும் பல தமிழ் நாட்டுப் பெரிய பிள்ளைகளுக்குப் பாடமாகவில்லை ; வாழ்வாகவில்லை. அச்சம் தவிர் 'என்றார் . எத்தனை பேர் அச்சத்தைத் தவிர்த்திருக்கிறோம். மக்களாட்சி என்கிறோம் . நமது அரசாங்கங்களைக் கண்டு நாமே அஞ்சுகிறோம். கோழைத்தனம் பலரது குலச் சொத்தாகிவிட்டது.
ஆயுதம் செய்வேம் என்று பாடிய பாரதி அடுத்து நல்ல காகிதம் செய்வேம் என்றான். உண்மையில் நல்ல காகிதம் ஒவ்வொன்றுமே ஓர் ஆயுதம் தான். ஆம் பாரதியின் பாடல்கள் அச்சாகிய ஒவ்வொரு காகிதமும் ஆயுதம்தானே! அது ஆயுதம் இல்லை என்றால் பிரிட்டிஷ் அரசு அவர் பாடல்களைத் தடை செய்திருக்குமா என்ன? அந்தப் பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும், இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான். அச்சமற்ற தன்மையே அமரத்வம் தருகிறது. அந்த அமரத்வம் பெற அனைவரையும் அழைக்கிறேன்
அன்பினிய . சுகி.சிவம்.
-
This book Acham Thavir is written by Suki Sivam and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் அச்சம் தவிர், சுகி. சிவம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Acham Thavir, அச்சம் தவிர், சுகி. சிவம், Suki Sivam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suki Sivam Suya Munnetram,சுகி. சிவம் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Suki Sivam books, buy Karpagam Puthakalayam books online, buy Acham Thavir tamil book.
|