book

வைணவமும் சமூக மாற்றமும்

Vainavamum Samooga Maatramum

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கோபாலகிருஷ்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358353
Out of Stock
Add to Alert List

இந்து சமய வேதங்களில் உள்ள பழமையான பிரிவுகளில் வைணவமும் ஒன்றாகும். பல்வேறு உபநிடதங்கள் புராணங்கள், ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் ஆகமங்கள் பகவத்கீதை ஆகிய நூல்கள் அதன் ஆதாரங்களாகும் . இவைகளுக்கு விளக்கம் கொடுப்பதில் ஏற்படும் வித்தியாசங்கள்தான் இந்து தத்துவ ஞானத்தின் பல்வேறுபட்ட மதங்களாக உருவெடுத்துள்ளன, வைணவம் ஒரு அகில இந்திய மதம் என்று கூறலாம் . ஆழ்ந்த பக்தியை வலியுறுத்தும் ராமானுஜரால் நெறிப்படுத்தப்பட்ட சமயம் வைணவம் மாறுபட்ட புதிய வழிபாட்டு முறைகள்  முறைப்படுத்தப்பட்ட சகயநிர்வாகம் மற்றும் ஆழ்ந்த பக்தியில்  ஈடுபடுவதை வைணவம் ஏற்கிறது. வைணவ சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வளர்ச்சி அடைந்தது. ஆயினும் அடுப்படையான தன்னடக்கம், கழிவிறக்கம் திருமால் மீதும் அவருடைய  பல்வேறு அவதாரங்களின் மீதும் பக்தி இவை வைணவத்தின் எல்லா பிரிவினருக்கும் பொதுவானவை.