book

கனவுக் கன்னிகள்

Kanavu Kannigal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.ஆர். சுரேந்தர்நாத்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789383067589
Add to Cart

சலங்கை ஒலி படத்தை நடிகை ஜெயப்ரதாவிற்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். அதன் பிறகு… அரசு மருத்துவமனையில் எனக்கு வலிக்காமல் ஊசி போட்ட நர்ஸ் ஜெயப்ரதாதான். மாரியம்மன் கோயில் அரசமரத்தடியில், ராட்டினம் சுற்றிய பெண்ணும் ஜெயப்ரதாதான். பாலு வாத்தியார் வீட்டு வாசல் திண்ணையில், ட்யூசனுக்காக உட்கார்ந்திருந்த அத்தனைப் பெண்களும் ஜெயப்ரதாதான். கணக்கில் மார்க் குறைவாக வாங்கி அழுதபோது, பகற்கனவில் ஜெயப்ரதா, ‘‘என்னது சின்னப்புள்ள மாதிரி அழுதுகிட்டு… கண்ணத் துடைச்சிக்கோ.” என்று கூறியவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அப்பா என்னைத் திட்டும்போது, ‘‘மரியாதையாப் பேசுங்க மிஸ்டர் கோவிந்தராஜன்” என்று ஜெயப்ரதா அப்பாவை அதட்டினார். இளையராஜாவின் பாடல்கள், தமிழர்களின் ஒரு அற்புதமான அந்தரங்க நண்பனாக இருந்தது.. சக மனிதர்களால் கைவிடப்பட்ட தருணங்களில் இளையராஜாவின் இசையே தமிழர்களைத் தாங்கிக்கொண்டது.