book

தொல்லிசைச் சுவடுகள்

Thollisaich chuvatukal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. மம்மது
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789384598105
Add to Cart

உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன்; அவன் தோன்றிய இடம் தமிழ் நிலம்; முதல் மொழி தமிழ்: முதல் இசை தமிழன் கண்ட தமிழ் இசை. இந்த உண்மைகள் உலக ஆய்வாளர்களால் கண்டறிந்து வெளியிடப்பட்டுவரும் இக்காலத்திலும், சிலர் அறியாமையாலோ வேண்டுமென்றோ, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இருந்த "சங்கீத மும்மூர்த்திகளால்தான் கர்நாடக சங்கீதம் கண்டுபிடிக்கப்பட்டது" என்று சொல்லிக்கொண்டும், "இந்தச் சங்கீதம் வேறு; ஓதுவார்கள் பாடும் தமிழிசை வேறு" என்றும், "அந்த சங்கீதம் சாஸ்த்ரீய சங்கீதம்; இந்தத் தமிழிசை மெல்லிசை" என்றும் கூறி மக்களைக் குழப்பிக் கொண்டும் திரிகிறார்கள். இக்கருத்துகளில் உள்ள போலிமையை எடுத்துக்காட்டி, நமது தமிழ்ச் செவ்விசையின் முன்மை, தொன்மை, நுண்மை முதலிய மேன்மைகளைச் சான்று காட்டி இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள். சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரப் பனுவல் முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆங்கு ஈங்காகவும், இலை மறை காய்கள் போலவும் காணப்படும் அரிய இசைக் குறிப்புகளையெல்லாம், ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் எஞ்சாமல் எடுத்துவந்து இசையுலகம் வியக்குமாறு அள்ளி அள்ளித் தருகின்றார். எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனைப் பார்த்த தமிழ்ச் சமூகம் அந்த இறைவனை ஆட வல்லான். கூத்தப் பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருவாக்கும் நா.மம்மதுவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.