book

அவதார புருஷன்

Avathara Purusan

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :271
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788189780715
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Out of Stock
Add to Alert List

'கவிஞர் வாலி ராமகாதையைப் புதுக்கவிதையாக எழுதி வருகிறார்... அற்புதமாக இருக்கிறது... அது விகடனில் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார் இளம் டைரக்டரான வஸந்த்!
'வாலி... ராமாயணம்... புதுக்கவிதை' மூன்றும் சேர்ந்து எண்ணிப் பார்த்தபோதே, உடனே அதன் அருமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த சில நாட்களிலேயே கவிஞர் வாலியை, துணை ஆசிரியர் சந்திக்குமாறு செய்தேன். துணை ஆசிரியர் சில அத்தியாயங்களைப் படித்து வியந்து... மறுநாளே என்னிடம் அதை உணர்ச்சிகரமாகச் சொல்லி_ எல்லாமே கிடுகிடுவென நடந்தது!

நான் கால‌ண்ட‌ரில் தேதியைப் பார்த்தேன்... அதிச‌ய‌ம்! அடுத்து வ‌ருவ‌து ச்ரி ராம‌ந‌வ‌மி! பிற‌கு, மின்ன‌ல் வேக‌ம்தான்...

'அவதார‌ புருஷ‌ன்' என்ற‌ அழ‌கான‌தொரு த‌லைப்பைத் த‌ந்தார் இணை ஆசிரிய‌ர் ம‌த‌ன். ப‌ட‌ம் வ‌ரைய‌ ம‌.செ. ஒப்புத‌ல் த‌ந்தார். '1995 ராம‌ந‌வ‌மியில் ஆர‌ம்பித்து, 1996 ராம‌ந‌வ‌மி வ‌ரை ஓராண்டு வெளியிடுவ‌து' என‌ அப்போதே வாலியிட‌ம் டெலிபோனில் பேசினேன்! அப்ப‌டித்தான் ஆர‌ம்பித்த‌து, அழ‌கான‌ புதுக்க‌விக் காவிய‌ம் 'அவ‌தார‌ புருஷ‌ன்'!

க‌விஞ‌ர் வாலியின் ஒவ்வொரு சொல்லும் எளிமை, அருமை! ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ள் அதைப் ப‌டித்து உண‌ர்ச்சிவ‌ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். அதைப் புத்த‌க‌மாக‌ வெளியிடுமாறு ஒவ்வொருவ‌ரும் கோரிக்கை விடுத்த‌ன‌ர்.

அதையேற்று, மிகுந்த‌ ம‌கிழ்ச்சியோடும் ம‌ன‌நிறைவோடும் விக‌ட‌ன் வெளியீடாக‌ 'அவ‌தார‌ புருஷ‌ன்' வெளிவ‌ந்திருக்கிற‌து. த‌ன‌து இல்ல‌த்தில் இருக்க‌வேண்டிய‌ புத்த‌க‌மாக‌ இதை ஒவ்வொரு த‌மிழ் வாச‌க‌ரும் க‌ருதுவ‌ர் என்றே நான் நிச்ச‌ய‌ம் ந‌ம்புகிறேன்.