book

அண்ணாவின் இறுதி நாட்கள்

Annavin Iruthi Natkal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளஞ்சேரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :79
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788184761191
குறிச்சொற்கள் :அண்ணா, சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, சாதனை, கட்சி, சம்பவங்கள்
Out of Stock
Add to Alert List

மாமனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தில் தவிர்க்க இயலாத தலைவர் பேரறிஞர் அண்ணா. அவர் பின்பற்றிய நெறிமுறைகள், எந்தக் காலகட்டத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவை. அண்ணாவின் கடமை உணர்வும், கண்ணியமும், கட்டுப்பாடும் வரலாற்று ஏடுகளில் மறக்க முடியாத பக்கங்கள். ராஜதந்திரம் மிக்க இந்த அரசியல் சாணக்கியரின் இறுதி நாட்கள், தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஒரு விதப் பதற்றத்துடன் கவனிக்கப்பட்டன. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் பூரண குணம்பெற்று மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருந்தது! சிகிச்சைக்காக அண்ணா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இறுதி நாட்களில் நடந்த சம்பவங்களை தனது டைரியில் குறித்து வைத்திருந்தவர் நூலாசிரியர் இளஞ்சேரன். குங்குமம் பத்திரிகையின் (மலையாளம்) ஆசிரியரான இவர், ஒவ்வொரு நாளும் அண்ணாவின் உடல் நலம் பற்றிக் கேட்டறிந்த தகவல்கள், படித்த செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். இதைப் படிக்கும்போது டென்ஷன் மிக்க அந்த இறுதி நாட்கள் மீண்டும் நம் நினைவுக்கு வரும். அண்ணாவின் அபூர்வமான புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.