book

தொல்காப்பியப் பாடவேறுபாடுகள்

Tholkaappiya Paadaverupaadugal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சு. இரவிச்சந்திரன்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Published on :2008
ISBN :9789380000060
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்காலங்களில் தோன்றிய பல்வேறு இலக்கணப் பிரதிகளுக்கும் தொல்காப்பியம் ஒரு முதன்மைப் பிரதியாக நின்று அவையனைத்திலும் தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.தொல்காப்பியத்திற்குப் பிறகு பல்வேறு இலக்கணப்பிரதிகள் இங்குத் தோன்றியுள்ளன. அப்பிரதிகள் அதனதன் தன்மையில் சிறப்பாக நிலைபெற்றிருந்த போதிலும் தொல்காப் பியத்தோடு அவற்றை ஒப்பவைத்து எண்ணும்போது அவற்றின் விழுமியங்கள் மாறுபடவேச் செய்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபின் ஆணிவேராக இன்று மையம்பெற்றுள்ள தொல்காப்பியம் ஒரு செறிவான தன்மைக்குள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருந்த போதிலும் அப்பிரதியின் தெளிவான காலத்தையும் சமயத்தையும் அறுதியிட்டு வரையறை செய்யமுடியவில்லை.