book

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்

Tamilnadu Ooratchigal Sattam

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். யசோதா முதலியார்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :656
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

தமிழில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் தொடர்பாக முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழான துணை விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. துணை விதிகள் வகையில் (1) தமிழ்நாடு ஊராட்சிகள் (ஊராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் மற்றும் வார்டுகள் பிரித்தல்) விதிகள் 1995, (2) தமிழ்நாடு ஊராட்சிகள் (இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செய்தல்) விதிகள் 1995, (3) தமிழ்நாடு ஊராட்சிகள் (பன்றிகளுக்கு உரிமம் வழங்குதல்) விதிகள் 1996, (4) மாவட்ட ஊராட்சி கூட்டம் நடத்துதல், விவாதத்திற்கான பொருள்கள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள், (5) மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயணப்படி வழங்குதல் (6) தமிழ்நாடு ஊராட்சி (ஊராட்சி ஒன்றியக் குழு பனி நியமனக் குழு உறுப்பினர் தேர்தல்) விதிகள் 1997, (7) தமிழ்நாடு ஊராட்சிகள் (மாவட்ட ஊராட்சித் தலைவரை உறுப்பினர்கள் இடைக்கேள்வி கேட்பது) விதிகள் 1999, (8) தமிழ்நாடு ஊராட்சிகள் (ஊராட்சி ஒன்றிய நிலைக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேர்தல் (நியமனக் குழுவினை தவிர) விதிகள் 1998, (9) தமிழ்நாடு ஊராட்சிகள் (கிராமசபை கூட்டம் கூட்டுதல், நடத்துதல் மற்றும் கூட்டத்தில் கலந்து கலந்து கொள்ள வேண்டியவர்களின் குறைவெண் வரம்பு) விதிகள் 1998, (10) மாவட்ட ஊராட்சியின் நிலைக் குழுக்கள் உறுப்பினர்கள் தேர்தல் விதிகள் 1998, (11) தமிழ்நாடு ஊராட்சிகள் (திட்டங்கள் தயாரித்தல், வேலைகளின் மதிப்பீடுகள் ஒப்பந்த முறைகள் மற்றும் நிபந்தனைகள்) விதிகள் 1998,- இப்படி மொத்தம் 85 விதிகள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஊராட்சி சட்டம் தொடர்பான ஓர் முழுமையான கையேடு என்று சொன்னால் அதில் மிகை இல்லை.