-
பண்பாடு என்பது ஓரினத்தின் வாழ்க்கை நெறி, மொழி, கலைகள், வரலாறு, பொருண்மியம், வாழ்விடம் முதலான பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதொரு விடயமாகும். காலத்திற்கும் வாழ்விடத்திற்கும் புறச் சூழல்களுக்கும் ஏற்பப் பண்பாடு மாறுந் தன்மை கொண்டது. எனவே சங்கத் தமிழர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு முதலில் அம்மக்கள் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு மிக இன்றிய மையாதது. சங்க காலம் பற்றிக் கூறும்;போது இலக்கிய வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பல்வேறுபட்ட காலவரையறைகளைக் குறிப்பிட்டபோதிலும், இலக்கியச் சான்றுகள், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள், பிறநாட்டறிஞர்களின் ஆவணங்கள், தமிழ்மொழி வரலாறு, இனம், பண்பாடு முதலான சான்றுகள் அனைத்தையும் ஒப்ப நோக்கும்போது, சங்க காலத்தின் பின் எல்லையாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும், அதற்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுக்காலப் பகுதியை முன் எல்லையாகவும் கொண்ட காலப்பகுதியைச் சங்க காலம் எனக் கொள்வது பொருத்தமாகும். சங்கத் தமிழர் பண்பாட்டினை அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், மற்றும் சிலப்பதிகாரம், இறையனார் களவியலுரை முதலான இலக்கிய இலக்கணச் சான்றுகளும், புதைபொருட் சான்றுகளும் பிறநாட்டார் குறிப்புக்களும் துணையாகவுள்ளன.
சங்கத் தமிழர் பண்பாட்டில் முதன்மையானதும் பல்வேறு நாட்டு அறிஞர்களாற் பெரிதும் பேசப்படுவதும் அக்கால இலக்கியக் கட்டமைப்பின் தனிச் சிறப்பாகும். சங்கப் பாடல்களாக இன்றெமக்கு 2381 பாடல்களே கிடைத்துள்ளன. இவற்றைப் பாடியோர்களில் 473 புலவர்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. 102 பாடல்களின் ஆக்கியோர் பெயர் அறியப்படவில்லை. இப்பாடல்கள் யாவும் மனனம் செய்யப்பட்டு வாய்மொழி மரபில் தலைமுறை தலைமுறையாகப் பயிலப்பட்டும் ஏடுகளில் பொறிக்கப்ட்டும் வழங்கி வந்தவை என்பதையும், அவை சோழர் காலத்தில் தேடித் தொகுக்கப்பட்டு பேணப்படலாயின என்பதும், 19 - 20 ஆம் நூற்றாண்டுகளில் டாக்டர் உ.வே. சாமிநாதஐயர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோரால் நூல் வடிவம் பெற்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
-
This book Pandai Thamizhar Vaazhviyal is written by and published by Paavai Publications.
இந்த நூல் பண்டைத் தமிழர் வாழ்வியல், கணபதி இளங்கோ அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandai Thamizhar Vaazhviyal, பண்டைத் தமிழர் வாழ்வியல், கணபதி இளங்கோ, , Varalaru, வரலாறு , Varalaru,கணபதி இளங்கோ வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Pandai Thamizhar Vaazhviyal tamil book.
|