book

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சிசுபாலன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788177358162
Add to Cart

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிறது.மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வுமுறையில் அலசி எழுதப்பட்ட படைப்புகள். இந்த நூல்களை படிப்பதால் நாம் கற்பது என்ன? அவர்கள் மார்க்சியத்தின் துணை கொண்டு அந்த நிகழ்வை எப்படி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனால் ஏன் அந்த முடிவுகளுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளை வந்தடைந்த பாதையின் விசேட அம்சங்கள் என்ன என்பதையே கற்கிறோம். இந்த பயிற்சி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.

மூலதனம் நூல் முதலாளித்துவ பொருளாதாரம் செயற்படும் இரகசியத்தை திறந்து காண்பிக்கிறது. அதன் முரண்பாடுகளை ஆய்வின் வழி நிரூபிக்கிறது. அந்த முரண்பாடுகளே அதற்கான சவக்குழியை வெட்டும் என்பதை ஏற்க வைக்கிறது. இதில் எந்த வர்க்கம் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடும், உணர்வின் மேதைமையோடும் முன்வைக்கிறது.

ஆகவே முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமோ அவையும், அந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவிலிருந்து உலகைக் காக்கும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கம்யூனிசக் கட்சியின் கற்பித்தலும் இன்றி மூலதனம் நூலை மட்டுமல்ல, மற்ற கம்யூனிச நூல்களையும் கற்பது சிரமம் என்கிறோம்.