book

தூக்கம் விற்ற காசுகள்

Thookkam Vitra Kaasugal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரசிகவ் ஞானியார்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384921033
Add to Cart

காலம் தோறும் 'பொருள் வயின் பிரிதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, டாலர்களுக்காக, யென்களுக்காக, தினார்கள் திர்ஹாம்களுக்காக.. பரம்பரை பரம்பரையாகத் தூக்கம் விற்கப்பட்டும், அவ்வப்போது இப்படிக் கவிதைகள் வழியாக வாங்கப்பட்டும் வருகின்றன. ஞானியார் ஒரு கவிஞனாக அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதை, இலையுதிர் காலத்தில் சருகு மிதித்துச் சந்தோஷப்படுவதை, புகைப்படம் எடுக்கும் நண்பனின் புன்னகை பறிக்கப்படுவதை, கடிகாரக் கடையில் நேரம் பார்ப்பவன் தடுமாறுவதை, விதையை விழுங்கிவிட்டு வயிற்றில் மரம் வளருபோ எனப் பயப்படுவதை, பாம்பின் பின்னல்கள் ஒத்த விரல்களின் ஸ்பரிசத்தை எல்லாம் அவர் அவதானித்திருப்பதில் அறிய முடிகிறது. கவிஞர்களுக்குகவிதைகளால் ஒரு கம்பீரமும் அழகும் வாய்த்துவிடும். ரசிகவ் . ஞானியாரின் கவிதைக் களஞ்சியம், தீர்ந்து போகாத அளவுக்கு, கை தட்டல்களை அறுவடை செய்திருக்கக்கூடிய வெடிப்பும் துடிப்பும் நிறைந்தனர். அந்தப் பருவம் அப்படி. அவை அப்படித்தான் இருக்கும் அப்படி இருந்தால்தான் அழகு நாற்றங்காலுக்கு இரு பச்சை. நட்ட வயலுக்கு ஒரு பச்சை. இரண்டும் நெல்தான். பச்சை அல்ல, கதிர் தீர்மானிக்கிறது நன்செய் நிலத்தையும் நல்ல விளைச்சலையும்.