book

நான் சுவாசிக்கும் சிவாஜி

Naan Suvasikkum Shivaji

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஒய்.ஜீ. மகேந்திரா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027617
Add to Cart

இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, ‘மாயாலு’ என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, ‘சோல்டி ஓபராய்’ என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, ‘நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா…’ என்று கேட்டார். முக்தா தவித்தார். ‘சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை…’ என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார். இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது. காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம். ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார். இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், ‘நாமும் தான் இழுத்தோம்… வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, ‘சடக்கு சடக்கு’ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே…’ என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும். தமிழ் நடிகைகளில், நடிப்பு திறமைக்கும், சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், புகழ் பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். தினமலர் – வாரமலர் இதழில், நான் எழுதும், ‘நான் சுவாசிக்கும் சிவாஜி’ தொடர் கட்டுரையை படித்து, சிவாஜியுடனான அவரது அனுபவத்தை, என்னோடு பகிர்ந்து கொண்டார்