book

கெடை காடு

Kedai Kaadu

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏக்நாத்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789384301019
Out of Stock
Add to Alert List

கெடைகாடு’ காட்டையும் மாட்டையும் கொண்ட வாழ்வின் அனுபவம். காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண் தரையெங்கும் எவனோ ஒருவன் சென்றுவந்த ஒற்றையடிப் பாதை இன்னும் ஆச்சரியம். ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை இவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன். அந்த விவரணைகளுக்கு இணையாக கிடைமாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்”. - எஸ்.ராமகிருஷ்ணன்