book

கனவு கண்டேன் தோழி

Kanavu Kanden Thozhi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஸ்ரீதுரை
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682909
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

பனி பொழியும் மார்கழி; குளுகுளு குளிர்; மென்மையான கவிதை; சொல்லவொணா புனிதம் - இவையெல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஐந்தாவதாக பெருமாள் கோயிலில் விநியோகமாகும் சூடான வெண்பொங்கலைச் சொல்லலாம். பொங்கல் ஒரு குறியீடு. பக்குவத்தைச் சொல்வது. திருப்பாவையில் ஆண்டாள் காட்டும் விடியற்காலம் அற்புதமானது. சொற்களின் லாவண்யம் காரணமாக, படங்களாக அவை நம் கண் முன்னே விரிகின்றன. மாமன், மாமி, மைத்துனன், பெண்டாட்டி போன்ற உறவுப்பெயர்களை ஆண்டாள் தன் திருப்பாவையில் குறிப்பிடுகிறாள். குடும்பஸ்தர்களான நமக்கு அது மகிழ்ச்சி தருகிறது. ஆண்டாள் கவிஞர்களிடையே தெய்வம்; தெய்வங்களிடையே ஒரு கவிஞர். 'கால இயந்திரம் ஒன்று நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... ஆண்டாள் காலத்துக்கே போய்விடலாமே!' என்று இதைப் படிக்கும்போது உங்களுக்கு நிச்சயம் தோன்றும். நூலாசிரியரின் பிறந்த ஊரே வைணவத் தலமாகவும் (மதுராந்தகம்), வசித்த வீடே கோயிலுக்கு அருகிலும் அமைந்துவிட்டதால், சிறிய வயதிலேயே காலை நான்கு மணிக்கெல்லாம் கோயில் ஒலிபெருக்கி மூலம் 'மார்கழித்திங்கள்' பாடி ஆண்டாள் இவரை எழுப்பி இருக்கிறாள். நிஜமாகச் சொல்வதானால் - உங்கள் மனசுக்கு ருசி நிரப்பும் தொன்னைப் பிரசாதம் இந்நூல்!

The month of dew dropping Markazhi. Chill weather. Soft poetry. Inexplicable holiness. All these are inter-related. Perumal temple 'venpongal' can be included as the fifth item in the list. It is a symbol of maturity. The dawn shown by Andal in Thiruppavai is wonderful. Because of the beauty of the words, they open up before us in images. Andal refers to such relational terms as uncle, aunt, brother-in-law, and wife in her Thiruppavai. It gives mirth to us who are family people. Andal is a goddess among poets and a poetess among gods. On reading this you will surely think that "if only a time-machine is available, we can go to Andal's time." As the author's native town itself happened to be a Vaishnavite town (Madurandagam) and the house where he lived happened to be near the temple, even at a very young age, he had the oppportunity of being woken up by Andal through temple speakers with "Markazhi Thingal" at four in the morning. To put it truly, this book is like a prasad given in folded leaf (thonnai) to fill your heart with taste!