book

குருதியில் நனையும் காலம்

Kuruthiyil Nanaiyum Kaalam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாநவாஸ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381095737
Out of Stock
Add to Alert List

இஸ்லாமிய அரசியல் எழுச்சி மற்றும் சிந்தனைகளை, பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதாக, அதற்குப் போராடுவதாக முன்பு இருந்தது. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கே பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்ய வேண்டிய நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய சமூகத்துக்குள் இருந்து அரசியல், சமூகவியல் ரீதியாக எத்தனையோ நல்ல இளைஞர்கள் தங்களது எண்ணங்களைப் பதிவுசெய்ய முளைத்தனர். அதில், ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிடத்தக்கவர். அவரது கட்டுரைத் தொகுப்பு இது. “மூஸ்லிம்கள் குறித்து பொது அரங்கில் வரையப்பட்டிருக்கும் சித்திரம் அபாயகரமானதாகவும் வேதனையளிப்பதாகவும் உள்ளது. அரசியல் உரிமை அற்றவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் வாழும் விளிம்பு நிலைச் சமூகமான முஸ்லிம்களை, பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்காமல் அடிப்படைவாதிகளாகவும் மதவாதிகளாகவும் பார்க்கும் போக்கு மேலோங்கி உள்ளது. எல்லா மனிதர்களக்கும் எளிதில் கிடைக்கும் எல்லாமும் முஸ்லிம்களுக்கு அவர்கள் ‘முஸ்லிம்’ என்ற ஒரே காரணத்துக்காகவே மறுக்கப்படுகிறது” என்று ஆதங்கப்படும் இவர், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் சில குறைப்பாட்டையும் விமர்சிக்கிறார். முஸ்லிம்கள் எப்போதும் தம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது இல்லை என்பதும் இரவது குற்றச்சாட்டு. திருமாவளவனின் முஸ்லிம் பாசம், சீமானின் நாம் தமிழர் கோஷம், அ.மார்க்ஸின் நிலைப்பாடுகள், அப்துல்நாசர் மதானியின் செயல்பாடுகள், நரேந்திரமோடியின் பிம்பம்… என, சமகாலத்துச் சர்ச்சைகள் அனைத்தையும் தன்னுடைய சுயசிந்தனையால் ஆளூர்ஷாநவாஸ் பரிசீலனை செய்கிறார். இதில் காயிதேமில்லத் பற்றிய கட்டுரை மிகமுக்கியமானது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 21-4-2013.