book

துருக்கித்தொப்பி

Thurukithoppi

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம் :அகல் பதிப்பகம்
Publisher :Agal Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :228
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

ஜாகிர்ராஜாவின் 3ஆவது நாவல் இது. அருமையான பூடகமான கற்பனைக்கு இடம் தரும் தலைப்பு. வாசித்து முடிந்ததும் எனக்குள் ஒரு ஆசுவாசம் தெரிந்தது. கி.ரா. மொழியில் சொன்னால் வசமான கை . மிகவும் கட்டுத் திட்டமுடன் செறிவுடன் தீவிரத்துடன் எழுதப்பட்ட நாவல் இது. துருக்கித்தொப்பி என்பது எட்டுக்கல் பதித்த வீட்டுத் தலைவராகிய கேபிஷேவின் அடையாளம் மட்டுமல்ல. ஜாகிர்ராஜா நிர்மாணிக்க முயல்வது தமிழுக்கு முற்றிலும் புதிய உலகம். இதுவரை இஸ்லாமிய சமூகத்தைப்பற்றித் தமிழில் எழுதப்பட்ட அனைத்து நாவல்களையும் பின்தள்ளிச் சீறிப்பாயும் சுதந்திர வேட்கைகொண்ட எழுத்து இது. இஸ்லாமிய சமூகத்தை கற்பனைகளுடனும் கரிசனத்துடனும் வண்ணங்களுடனும் தீட்டும் எழுத்துத் தூரிகைகள் மலையாளத்தில் உண்டு. வைக்கம் முகம்மது பஷீர் என்றும் புனத்தில் குஞ்ஞப்துல்லா என்றும் மேதைகளின் வடிவத்தில். தமிழில் அவர்க்கு இணையான ஆளுமைகள் கிடையாது இதுவரை. இதை நானோர் இலக்கிய விமர்சனமாகவே சொல்கிறேன். எனக்கு இளைஞனாக இருக்கிற ஜாகிர்ராஜாவிடம் எதிர்பார்ப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது ---- நாஞ்சில் நாடன் கூற்றாகும்.