-
கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள். பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி நெக்குருகிப் போவதுண்டு. நூலாசிரியர் எஸ்.கணேச சர்மா, காஞ்சிப் பெரியவரின் நெருக்கத்தில் இருந்தவர். அவரின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர். அவர் புகழைப் பேசவும் கேட்கவும் பாடவும் சந்தர்ப்பங்கள் பலவும் தனக்குக் கிடைத்திருப்பதை புண்ணிய பலனாக எண்ணி வருபவர். காஞ்சி மகானின் புண்ணிய சரிதத்தை ஏழு காண்டங்களாக அமைத்து கணேச சர்மா செய்த உபன்யாசங்களின் தொகுப்பே இந்த நூல். பக்தர்களுக்கு காஞ்சி முனிவருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்த அவதார புருஷர் அருள்பாலித்த பல சம்பவங்களை கோவையாக எடுத்துரைக்கிறார். நூலைப் படிக்கும்போது அந்த மகானை நேரில் தரிசிப்பது போன்ற உணர்வும், அன்னாரின் அருளுரைகளைக் கேட்டு மகிழ்வது போன்ற அனுபவமும் ஏற்படும். இந்த நூலைப் படித்து, அந்த கருணை தெய்வத்தின் அருள் கடாட்சத்தைப் பெற பிரார்த்திப்போம்.
-
This book Karunai Deivam Kanji Maamunivar is written by S.Ganesh Sharma and published by Vikatan Prasuram.
இந்த நூல் கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர், எஸ். கணேச சர்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karunai Deivam Kanji Maamunivar, கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர், எஸ். கணேச சர்மா, S.Ganesh Sharma, Aanmeegam, ஆன்மீகம் , S.Ganesh Sharma Aanmeegam,எஸ். கணேச சர்மா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Ganesh Sharma books, buy Vikatan Prasuram books online, buy Karunai Deivam Kanji Maamunivar tamil book.
|