book

சாதியை ஒழிக்க வழி

Saadhiyai Ozhikka Vazhi

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. ஆர். அம்பேத்கர்
பதிப்பகம் :பெரியார் புத்தக நிலையம்
Publisher :Periyar Puththaga Nilaiyam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

“ நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பிராமணர்கள்(உயர் சாதி இந்துகள்) பிராமணர் அல்லாதாருக்கு எதிராக தங்கள் சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே பிராமணர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பிராமணர்களுக்கு எதிராக தங்கள் சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதே பிராமணர்கள் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எங்கெல்லாம் ஒரு கூட்டம் தனக்கென்று பிரத்தியோக நலன்களைக் கொண்டுள்ளதோ, அங்கெல்லாம் இந்த சமூக விரோத மனப்பான்மை காணப்படும். ஆனால் இந்த இரு சாதி இந்துக்களும் தலீத்துக்களுக்கு எதிராக மட்டும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். தலீத் இடஒதுக்கீடு போன்றவை பற்றி பேச்சுகள் நடைப்பெறும் போது இருவரும் சேர்ந்து தீவிரமாக எதிர்ப்பார்கள். எனவே இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.”