-
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்தகத்தின் ஒரு முகம்.
மதுரை தெற்கு மாடவீதி, ரங்கநாதன் தெரு, மெரினா பீச், அண்ணா சதுக்கம் - நமக்குத் தெரியும். பக்கிங்ஹாம் அரண்மனை, ஈஸ்ட் ஹாம் கடைவீதி, கென்சிங்டன் பூங்கா, பிக்கடிலி சதுக்கம் - இவை தெரியுமா? தான் சென்று உணர்ந்த லண்டனை தன் எழுத்தின் வழியே காட்சிப்படுத்தி, ஒரு தேர்ந்த டூரிஸ்ட் கைட்போல நம் கண்ணில் கொண்டு வருகிறார் இரா. முருகன்.
அவரது எழுத்து ‘லண்டன் ஐ’ மேல் ஏறி நின்றால் கிடைக்கும் ஏரியல் வியூவையும் சாத்தியப்படுத்துகிறது. கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிக்பென் கோபுரக் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நமக்கு உணர்த்துகிறது. இது புத்தகத்தின் இன்னொரு முகம். தினமணி கதிரில் வெளிவந்து வாசகர்களின் நினைவில் நிலைத்த தொடரின் நூல் வடிவம். உதடு விரிந்த புன்னகை குறையாமல் லண்டனின் சரித்திரத்தை உள்வாங்கவும், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே லண்டனின் குளிரை உணரவும் செய்கிறார் இரா. முருகன்.
-
This book London Diary is written by Ira Murugan and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் லண்டன் டயரி, இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, London Diary, லண்டன் டயரி, இரா. முருகன், Ira Murugan, Varalaru, வரலாறு , Ira Murugan Varalaru,இரா. முருகன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ira Murugan books, buy Kizhakku Pathippagam books online, buy London Diary tamil book.
|
இந்த ஆண்டு நான் வேலை செய்த புத்தகங்களில் ரசித்து ரசித்துப் படித்தது இரா.முருகனின் லண்டன் டயரி. லண்டனில் பல மாதங்கள் தங்கியிருக்கிறேன். தெருக்களில் தனியாகச் சுற்றியிருக்கிறேன். நாள் முழுமைக்குமான அல்லது வார இறுதிக்கான தரையடி ரயில் டிக்கெட் எடுத்து ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் எப்போதும் ஒரு எழுத்தாளனின் பார்வையில் நகரைப் பார்வையிட்டது கிடையாது; மக்களைப் பார்த்தது கிடையாது. அவர்களை மனத்தளவிலாவது குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது கிடையாது.
ஆரம்பத்தில் வியக்கவைத்த கட்டடங்கள்கூட ஒரு கட்டத்தில் பிரமைகள் அகன்று சாதாரணமான இடங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மெஷின் போல பாடிங்க்டன் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கே கிடைக்கும் விதவிதமான சூப் கிண்ணங்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, ரயிலில் ஏறி, ரயில் மாறி, இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி, கூட்ட நெரிசலில் கரைந்து ஒரு புள்ளியாகி, அலுவலகம் சென்று, வேலையை முடித்து, மீண்டும் அதே பாதையைப் பின்பற்றி, மீண்டும் வசிக்கும் ஹோட்டல் வந்து, மீண்டும்…
இரா.முருகனின் புத்தகத்தை எடிட் செய்ய எடுத்தபோது நான் எங்கோ விட்டு வந்திருந்த லண்டன் மீண்டும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. இது தினமணி கதிரில் தொடராக வந்தபோது படித்திருந்தேன். ஆனால் விட்டு விட்டு (சில வாரங்கள் ஊர்ப் பயணத்தில் நிஜமாகவே விட்டுப்போய்) படித்ததில் அதே அனுபவம் வாய்க்கவில்லை. இப்போது மொத்தமாகப் படித்ததில் ஒரு முழுமை கிடைத்தது. லண்டனையே பார்த்திராதவர்கள் இந்தப் புத்தகத்தை எப்படிப் புரிந்துகொள்வார்கள்? தெரியவில்லை. புத்தகத்தைப் படித்த யாராவதுதான் சொல்லவேண்டும்.
லண்டனில் தனது நடைப்பயணங்களை முன்வைத்து இரா.முருகன் எழுதியதுடன், கூடவே தன் இயல்பான நகைச்சுவை நடையில் லண்டனின் வரலாற்றையும் தனியாகப் பின்னர் கொடுத்திருந்தார். ஆனால் அது தனியாகப் பின்னால் ஒட்டவைத்தால் சரியாக வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அந்த வரலாற்றைப் பல துண்டங்களாகப் பிய்த்து ஒவ்வொரு அனுபவ அத்தியாயத்துக்கு முன்னதாக ஒரு துண்டாகச் சேர்த்தேன். இப்போது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனது மாற்றத்தை இரா.முருகனுக்கு அனுப்பி அவரது ஒப்புதலும் பெற்றபிறகு புத்தகமானது.
வேண்டிய படங்கள் சேர்க்கப்பட்டு, புத்தகம் உயிர்பெறத் தொடங்கியது. ஈஸ்ட் ஹாம் படம் ஒன்று தேவை. கிரிதரன் உதவினார். ஒரு வார இறுதியில் ஈஸ்ட் ஹாம் சென்று பல படங்களைக் கிளிக்கி அனுப்பிவைத்தார். அதிலிருந்து ஒரு படத்தை எடுத்துக்கொண்டோம்.
ஆக, இது வரலாறா? ஒரு தனி மனிதன் உலகின் பெரு நகரம் ஒன்றில் பெற்ற அனுபவங்களா?
இரண்டும் கலந்தது. இனிமையானது.
இதை ஸ்காட்லாந்து டயரி (அல்லது எடின்பரோ டயரி?) என்றல்லவா சொல்லவேண்டும் என்று கேட்டார் கிரிதரன். ஏனெனில் இதில் உள்ள அனைத்தும் எடின்பரோவில் வசித்த காலத்தில் இரா.முருகன் எழுதியவை. ஆனால் இது லண்டன் பற்றிய டயரி அல்லவா? ஒவ்வொரு வார இறுதியும் எடின்பரோவிலிருந்து லண்டன் வந்து சுற்றியபின் அவர் எழுதியது.
எந்த டயரியாக இருந்தாலும் சரி, இந்த நடையில் எழுதினால், படித்துக்கொண்டே இருக்கலாம்!
நன்றி : http://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_7403.html