| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
ஆசிரியரின் (உமா சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : |
மற்ற வரலாறு வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
சிப்பாய் புரட்சி பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் எந்தவித யோசனையும் செய்யாமல் துணிந்து வாங்கலாம் இந்த புத்தகத்தை. ஒவ்வொரு பக்கத்திலும் பிரச்சனையை அடிப்படையாகக்கொண்ட இந்த புத்தகத்தை குழப்பம் இல்லாமல் எழுதிய ஆசிரியர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே.
அவனுக்கென்ன ராஜ வாழ்க்கை என்று நாம் பேசிக்கொள்வது வழக்கம். உதவித்தொகை வாங்கி பிழைப்பு நடத்தும் இந்த காலத்து முதியவர்கள் போல அந்த காலத்து ராஜாக்கள் ஆங்கிலேயரிடம் இந்த மாதம் இவ்வளவு தொகை எங்களுக்கு கொடுத்தால் பரவாயில்லை என கெஞ்சி கேட்டு பிழைப்பு நடத்தியதை இந்த புத்தகத்தில் படித்த பிறகு ராஜ வாழ்க்கையின் உண்மை நிலை புரிகிறது.
சில நிறுவனங்களில் பணியாளர்களிடம் அனைத்து பொருப்புகளையும் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு வருகிறது என்பதில் மட்டுமே முதலாளிகள் கவணம் செலுத்திக்கொண்டிருப்பார்கள். சில வருடங்கள் கழித்து அந்த பணியாளன் யோசித்துப்பார்ப்பான். நான் தான் வேலை செய்கிறேன், எனக்குதான் அனைத்து விசயங்களும் தெரிகிறது, பணம் மட்டும் முதலாளிக்கு போகிறது! இந்த தொழிலை ஏன் நான் தனியாக செய்யக்கூடாது என்று யோசித்து அந்த முதலாளியிடமிருந்து விலகிச்சென்றுவிடுவான். அதற்குப்பிறகு அந்த முதலாளி தன்னுடைய ஊழியன் இப்படி துரோம் செய்துவிட்டானே என புலம்பத்தொடங்குவார். அப்படித்தான் நடந்துள்ளது ஆங்கியேலர் நம் மண்ணை ஆக்கிரமித்தது. ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் அத்துமீறி ஆதிக்கம் செலுத்தியதாக மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் நாம் அப்போதிருந்த சூழ்நிலையைப்பற்றி பேசுவதில்லை. நாம் பேசாமல் விட்ட அந்த விசயத்தை இந்த புத்தகம் பேசுகிறது. வாகணத்தை பூட்டாமல் சாலையோரம் நிருத்திவிட்டு காணாமல் போய்விட்டதென்று சிலர் பொருப்பில்லாமல் புலம்புவார்களே அவர்களைப்போல்தான் நம் நாட்டைச்சார்ந்த மன்னர்கள் செயல்பட்டுள்ளார்கள். வரும் மாணியத்தை வாங்கிக்கொண்டு சோம்பேரித்தனமாக எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்தாமல் சுக வாழ்க்கையில் மட்டுமெ கவணம் செலுத்தியுள்ளார்கள் நம் மன்னர்கள். பாதுகாப்பு வேண்டுமா ஆங்கிலேயனை கூப்பிடு, அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா வரி வசூல் செய்துகொள்ளச்சொல் என்பதையே வழக்கமாக கொண்டிருந்தவர்களிடம் யாராக இருந்தாலும் அத்துமீறியிருப்பார்கள் என்பதுதான் உண்மை.
சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது, வரலாறு புத்தகத்தில் படித்த ஒருசிலரின் வாழ்க்கையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு புத்தகத்தையும் வழிநடத்திச்செல்ல புத்தகத்தில் யாராவது ஒருவர் முன்னிலை படுத்தப்படுவது வழக்கம். இந்த புத்தகத்தில் அப்படியாரும் இல்லை. இது மங்கள்பாண்டே பற்றியா புத்தகமா! என ஆச்சரியத்துடன் படித்தால் அவரது சாகாப்தம் இரண்டு மூன்று பக்கங்களோடு முற்றுப்பெருகிறது. ஒரு வேலை ஜான்சி ராணி பற்றிய புத்தகமாக இருக்குமோ! என நினைத்தால் அவரும் அப்படியே. வேறு யார்தான் புத்தகத்தில் முன்னிலை படுத்தப்பட்டிருக்கிறார்க்ள்????? புரட்சி. ஆம் புரட்சிதான் இந்த புத்தகத்தை வழிநடத்துகிறது. முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை போராளிகள் வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் அவர்களின் மூலமாக புரட்சி மட்டும் ஏந்திய தீபமாக கொண்டு செல்லப்படுகிறது.
கட்டபொம்மன், புலித்தேவன் போன்றோர்கள் வெள்ளையர்களுடன் மோதியது அவர்களது சொந்தப்பிரச்சனைதானே அதெப்படி சுதந்திரப்போராகும் என்று சுதந்திரம் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் தோண்றும். அந்த விசயத்தை ஆசிரியர் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு அவற்றை ஏன் சுதந்திரப்போராக எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளது சிறப்பு.
திருவாளர் பாம்பு அவர்களே என்று மரியாதையாக அழைத்தாலும் பாம்பு நம்மை கடிக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி அந்த காலத்து ராஜாக்கள் அறிந்திருக்கவில்லைபோலும். அநியாயத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளார்கள். ஒரு புறம் நீங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடுங்கள் எங்களுக்கு கஞ்சி போதும் என சிப்பாய்களாக இருந்த நம் மக்கள் கூறுகிறார்கள் என்றால் மறுபுறம் தான் சேமித்த பணத்தை ஆங்கிலேயருக்கே கொடுத்து உதவியிருக்கிறார் ஒரு ராஜா. அளவுக்கு மீறிய விசுவாசம், மரியாதை செலுத்த காரணம் என்ன? சிறு சிறு நாடுகள் ஒன்றின் மீது மற்றொன்றுக்கு பொறாமை, போட்டி, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் முயற்சி ஆகியவற்றிற்கு ஆங்கிலேயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் முடிவு இரண்டு கரடிகளுகு பிரச்சனையை தீர்த்துவைக்க வந்த குரங்கு கதைபோல் ஆகிவிட்டது.
ஆங்கிலேயர், இந்தியர் என்ற சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி ஒருவர் நம்மை கவர்கிறார். அவர் கிளைவ். இரண்டு முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு பிறகு போரிலாவது தன் உயிர் போகட்டும் என ரானுவத்தில் சேர்ந்தவராம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தொழில் நுட்பத்துறை பிரபலமாக இருந்ததில்லையா அதுபோல அந்த காலத்தில் ஆங்கிலேயரின் ரானுவத்தில் பணியாற்றுவது மிகவும் விரும்பத்தக்க ஒரு தொழிலாகவும், பிரபலமான ஒரு தொழிலாகவும் கருதப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தகப்பன் மகன் பேரன் என ஆங்கிலப்படையில் பணியாற்றுவதை சந்தோஷமாக கருதியிருக்கிறார்கள். வரலாற்றில் ஒரு அழிவு ஏற்படுகிறது என்றாலே பெரும்பாலும் அங்கே ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். இங்கேயும் இருக்கிறார்கள். ஆங்கிலேயரின் மனைவிமார்கள் வடிவில். ஆசையாக பணிக்கு சென்ற நம்மவர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் முதல் பிரிவு ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறார்கள் ஆங்கிலேயரின் மனைவிகள்.
நம் நாட்டில் தற்போது நடக்கும் சில பிரச்சனைகள் படிக்கும் போது பயங்கரமாக இருக்கும். ஆந்திராவில் பிரச்சனை தமிழகத்தில் பிரச்சனை என படிக்கும்போது பெரிய பிரச்சனையாக தெரிகிறது. ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, அட இவ்வளவு காலம் நாம் ஒற்றுமையாக இருக்கிறோமே என்ற ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது. இந்து முஸ்லீம் பிரச்சனை, சீக்கியர் முஸ்லீம் பிரச்சனை என ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டிருந்ததை படிக்கும்போது. இப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றே தாராளமாக கருதலாம்.
புரட்சியில் நிகழ்ந்த வன்முறைக்காட்சிகளை ஆங்கிலப்படத்தில் பார்ப்பதுபோல அப்படியே விவரித்துள்ளார் ஆசிரியர். ஒரு வீட்டுக்குள் வைத்து கசாப்புக்காரர்களால் பெண்கள், குழந்தைகள் வெட்டி சாய்ப்பதாகட்டும், ஆங்கிலேயர்களை படகில் ஏற்றி வழியனுப்பிவிட்டு தப்பித்த ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்து ஆற்றின் நிறத்தையே மாற்றியதாகட்டும், ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்முன் நிருத்துகிறார் ஆசிரியர்.
காந்தியம் என்பது வறட்டு சித்தாந்தமில்லை என தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, இந்த புத்தகத்தை படித்ததும் புரிகிறது. ஒரு புரட்சியாளர், அவர் உருவாக்கிய படை, தேவையான ஆயுதங்கள் அவ்வளவுதான். ஒவ்வொருவரும் இதைக்கொண்டே போராடுகிறார்கள். ஒவ்வொரு போராட்டம் முடிந்ததும் ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது அனைவரிடமும் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” அது யாருக்கும் தெரியவில்லை. ஆட்களும் ஆயுதங்களும் போதும் என நினைத்ததால் ஒரு நூற்றாண்டு காலம் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. அஹிம்சை என்றொரு காந்திய சிந்தனை தோண்றாமல் மீண்டும் புரட்சியாளர்கள், ஆயுதம் என நம் சிந்தனை சென்றிருந்தால் இன்னும் ஓர் நூற்றாண்டு நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். நல்ல வேலை நம் ஆயுதம் அஹிம்சையாக மாறியது.
நன்றி : http://bookreview-sai.blogspot.com/2009/12/blog-post_14.html
புரட்சி என்பது மார்க்ஸ் சொல்வதைப்போல “தலைகீழாகப் புரட்டிபோடுவதுதான்“. ஆனால், 1857ன் சிப்பாய் புரட்சி என்பது, இருக்கின்ற எந்த அமைப்பையும் புரட்டிப்போடவில்லை. அதிகாரத்தை வெள்ளையர் கைகளிலிருந்து சுதேச ராஜாக்களின் கைகளுக்கு மாற்றவில்லை. மாறாக, கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த இந்தியாவின் அடிமைவிலங்குக்கான பூட்டின் சாவியை பிடுங்கி இங்கிலாந்து மகாராணியின் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்தக் கொத்துச் சாவியில் சொருகியதைத்தான் செய்தது. ஆனாலென்ன நாம் இந்தியர் . அதனால் இதை வீரதீரமிக்க மாபெரும் புரட்சி என்போம் இந்த எண்ணம் தான் நம்மிடம் இதுநாள் வரை நிலவி வருகிறது. நம்முடைய பாட புத்தகங்களும் இதைத் தான் போதிக்கின்றன. கிழக்கு பதிப்பகத்தின் 1857 சிப்பாய் புரட்சி புத்தகமும் இந்த கருத்தைக் (புரட்சிதான் இது) கொண்டிருந்தாலும், அந்நிகழ்ச்சியின் அடுத்த பக்கத்தையும் விமர்சிக்கிறது.
பிரெஞ்சுப்புரட்சி நிலபிரபுக்களின் ஆதிக்கத்தையும் மாதாக்கோவில்களின் ஆதிக்கத்தையும் தகர்த்தெறிந்து முதலாளித்துவத்துக்கு ராஜபாட்டை போட்டுக்கொடுத்ததைப் போல, இங்கு நிலபிரபுத்துவத்தின், மதத்தின் ஆதிக்கத்தையோ அல்லது அவற்றில் ஏதோ ஒன்றையோ கூட தகர்த்தெறியவில்லை. மாறாக, இந்தக் கிளர்ச்சியே அத்தகைய சக்திகளால் தான் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை தோற்கடித்து நகரங்களை வீழ்த்தியவுடன் சிப்பாய்கள் அந்த [மகா]ராஜாக்களின் காலடியில் சமர்ப்பணம் செய்தனர், குடியரசு, மக்களாட்சி, மக்கள் சக்தி என்ற கருத்தாக்கங்களை எல்லாம் அறியாத, கொள்கைகளோ, வலிவான சித்தாந்தமுடைய தலைவனோ இல்லாததொரு கிளர்ச்சிதான் இந்த சிப்பாய் புரட்சி. ஆனாலும் முதுகெலும்பை மறந்து நத்தையோடு போட்டி போட்டுகொண்டு ஊர்ந்து செல்ல பழகிபோயிருந்த மக்களும் மகாராஜாக்களும் இது வீழ்த்தமுடியாத மாபெரும் கேடயம் அல்ல, அதனுள்ளே துரு பிடித்து, ஒரு நான்கடி அடித்தால் உடைந்து போகக் கூடிய தன்மையுடையதுதான் இது என்பதை உணர்த்தியது. தொண்ணூறு ஆண்டுகள் மற்றும் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு நடக்கவிருக்கிற ஒரு நிகழ்வுக்கு அடித்தளமிட்டது இப்புரட்சி என்றால் அது மிகையில்லை.
பிரேவ் ஹார்ட் படத்தில் வாலஸ் வில்லியம்ஸை எதிர்த்து இங்கிலாந்து போரிடும் போது இங்கிலாந்து படையின் ஒரு பிரிவு வாலஸின் படையை தாக்க ஓடி வந்து வாலஸ் வில்லியம்ஸ் வாழ்க! என்று கோஷமிட்டு அவன் படையுடன் சேர்ந்து இங்கிலாந்து படையை எதிர்த்தது போன்றதொரு சம்பவம் டெல்லியில் மீரட்டின் சிப்பாய்களை எதிர்த்து கர்ணல் ரிப்லி தனது பறங்கிபடையுடன் வந்ததும் அவனது படையின் ஒரு பகுதி மீரட் சிப்பாய்களுடன் சேர்ந்து அவனையே கொன்ற சம்பவத்தை படம்பிடிக்கிறது.
ஆகச் சொல்லப்படும் சிப்பாய் புரட்சி நடைபெற்றுகொண்டிருந்த காலத்திலேயே உள்நாட்டு உள்ளடி குழப்பங்களும், அரச பதவியை கைப்பற்றும் போராட்டங்களும், ஒருவரை மாற்றி ஒருவர் பழிவாங்கும் போராட்டங்களும் நடந்ததையும் இப்புத்தகம் பதிவு செய்கிறது. ஜான்சியில் கிழக்கிந்திய கம்பெனி வழங்கிய மாளிகையில் சமையல் செய்து சாப்பிட்டுகொண்டு தன் பச்சிளம் பாலகனுக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனுபாய், சிப்பாய் புரட்சி ஏற்பட்டதினால் நடைபெற்ற கொந்தளிப்பை பயன்படுத்தி (சில உள்ளடி வேலைகள் செய்து அரச உரிமைக்கு போட்டிக்கு வந்தவனை வீழ்த்தி) ஜான்சி ராணி ஆனாள்.
வாழ்வில் ஒரேயொரு போர்க்களத்தைக்கூட (பாபர், அக்பர், ஔரங்கசீப் வழிவந்த ) பார்க்காத பகதூர்ஷா தன் முன்னால் குவிந்துகிடந்த லட்சோபலட்சம் வீரர்களை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தது சிப்பாய்புரட்சியின் பரிதாபகரமான தோல்விக்கு காரணம். நாடோடியாய் அலைந்து திரிந்த காலத்தில் தன் பின்னால் வந்த ஆயிரம் சொச்ச வீரர்களை வைத்து, காபூலைக் கைப்பற்றி, ஆஃப்கானிஸ்தானை விழுங்கி பின்னாளில் அசோகருக்குப் பிறகு பரந்த ஹிந்துஸ்தானை கட்டியாண்ட பாபரின் எள்ளு கொள்ளுப்பேரனின் இந்த செயல் பரிதாபமானதுதான். தன்னை பேரரசனாக பிரகடணம் செய்து தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சுதேசி சிப்பாய்களை, படை தேவைப்படும் இடங்களுக்கு பகிர்ந்தளித்து, கிழக்கிந்திய கம்பெனி படைகளின் கை ஓங்கும் இடங்களில் அவர்கள் கைகளை வெட்ட அந்த படைகளைப் பயன்படுத்தாமல், சில பல மாதங்களுக்குப் பிறகு மொத்தமாய் வெள்ளையர்களுக்கு பலிகொடுக்க படைவீரர்களை சேர்த்து வைத்திருந்தார் மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி பாதுஷா. (மொகல் வம்சத்தின் பரிதாப பேரரசர் ஹூமாயினின் கல்லறையில் இந்த பரிதாப பேரரசர் போய் ஒளிந்துகொண்டது விசித்திரமான சரித்திர திரும்பல்தான்.)
தலைமையேற்க வேண்டிய பாதுஷா பாவாடை நாடாவுக்குள் தன்னைக் கட்டிக்கொண்டதை உணர்ந்து வேறுயாராவது ஒருவர் தளபதி பொறுப்பையாவது ஏற்றிருந்திருக்கலாம். ஆனால், மற்ற புரட்சித் தலைவர்களெல்லாம் தங்களை ஒரு பிரதேசத்துக்குள் சுருக்கிக் கொண்டது ஒரு சோகம்தான். நானா சாஹிப், தாந்தியா தோபே, ஜான்சிரானி, குன்வர் சிங், கான்பகதூர் கான் போன்றோர் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கிழக்கிந்தியக் கம்பனியின் படையை எதிர்க்காதது, படை பராமரிப்பு, படை பகிர்ந்தளிப்பு, சங்கிலித்தொடர் போன்ற தாக்குதல் ஆகியவை இல்லாமல் தங்கள் சக்தியை இழந்ததும் ஒரு பெரும் சோகமே. ஒரு வலுவான எதிரியை தாக்கச் செல்கையில் அவனுக்குச் சமமாக தன்னிடம் படை இல்லாமல் போனாலோ ஆயுதபலம் இல்லாமல் போனாலோ முன்னெடுக்க வேண்டிய கொரில்லப் போர்முறையை முன்னெடுக்காமல் போனது ஒரு தவறுதான். (தாந்தியா தோபே மற்றும் குன்வர் சிங் சில சமயங்களில் கொரில்லப்போர் முறையை முன்னெடுத்தனர்.) நீண்ட மலைகளும், கோட்டைகளும் கொண்ட வட இந்தியபிரதேசங்களில் கொரில்லபோர் முறை சாத்தியமானதே. இப்படியும் இன்னும் சில தோல்விக்கான காரணங்களையும் இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயம் சொல்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு மங்கள் பாண்டே படத்தை ஒரு முறை பார்த்தல் நலம். வார்த்தைகளில் பார்த்ததைக் காட்சியில் பார்க்கலாம் (சில அத்தியாயங்கள் மட்டும்)
வழக்கமாக கிழக்கு புத்தகங்கள் non- linear ஆக படைக்கப்படுபவை. (அதாவது ஏழாவது அத்தியாயமாய் வர வேண்டியது முதல் அத்தியாயத்துக்கும் முதல் அத்தியாயம் இரண்டாம் அத்தியாயத்துக்கும் ஆறாவது அத்தியாயத்தில் முதலாவதான ஏழாவது அதிகாரமும் நினைவு கூறப்படுவது.) ஆனால், இந்த புத்தகம் அந்த வகையில் படைக்கப்படாமல் அமைந்திருப்பதில் கிழக்கின் டச் மிஸ்ஸிங். ஆசிரியரைப் பற்றிய எதுவுமே தெரியவில்லை, 240 பக்கம் புத்தகம் எழுதினவர் அவரைப் பத்தி ஒரு நாலு வரி எழுதாம விட்டுட்டாரே. இந்த புத்தகத்தைப் படித்த பிறகு புத்தகங்களில் முன்னுரை, பதிப்புரை போன்ற கொசுறு சமாச்சாரங்கள் மற்ற புத்தகங்களில் இருக்குமா என்று எனக்கு சந்தேகம்வந்துவிட்டது.
நன்றி : http://thamiziniyan.com/1857-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/