book

மாயவலை

Maayavalai

₹1000
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :1280
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184930504
குறிச்சொற்கள் :சர்வதேச தீவிரவாதம், தகவல்கள், ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். தீவிரவாதம், இருபத்தியோராம் நூற்றாண்டின் புற்று நோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா, ஹிஸ்புல்லா, தாலிபன் போன்ற இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்கு பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன?

தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எப்படிச் செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? இயக்கங்களுக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைக்கின்றன? எம்மாதிரியான பயிற்சிகள் தரப்படுகின்றன? எந்தெந்த தேசங்கள் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிக்கின்றன? ஏன் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது?

போராளி இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கிடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இருநூறு இதழ்கள் தொடராக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி கண்டது இது. இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தினைப் பற்றிய பகுதிகளும் தனித்தனி நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன. மொத்தமாக வாசிக்கவும் பாதுகாக்கவும் விரும்புவோருக்கான சிறப்புப் பதிப்பு இது.