book

லஷ்மி கடாட்சம்

Lakshmi Kadatsham

₹730
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :872
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689380
Out of Stock
Add to Alert List

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.

அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

தேவன் நாவல்களில் ‘லக்ஷ்மி கடாட்சம்’ தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் இந்நாவலில் காணலாம். நட்புக்கு வேங்கடாசலம், பெருந்தன்மைக்கு கோவிந்தன், குரூரத்துக்கு நடராஜப் பிள்ளை, கபடத்துக்கு சாரங்கபாணி, மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொருபாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கும்தேவனின் சாதனை ஆச்சரியமானது.