book

இளமையே இனிமை

Ilamaiye Inimai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788184760255
குறிச்சொற்கள் :சாஸ்திரங்கள், பொக்கிஷம், புராணம், அனுபவங்கள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு!என்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், இளமையும் அறிவும்தான் ஒரு மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய அளவுகோல்கள். சந்தோஷம் என்பது உதட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; மனத்தளவிலும் இருக்கவேண்டும். அதை வழங்குவதுதான் இளமை. அந்த வாழ்க்கைதான் இனிமை. இழந்த பணத்தைக்கூட திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது. இளமையும் அப்படிப்பட்டதுதான். இங்கே சொல்லக்கூடிய இளமை, வயதோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; மனதோடும் சம்பந்தப்பட்டது. அனுபவங்கள் சேரச் சேரத்தான் மனம் பக்குவப்படும். என்றென்றும் இளமையாக இருப்பது பற்றி எத்தனையோ வழிமுறைகளை சாஸ்திரங்கள் சொல்லி இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள், தங்களது வாழ்வில் நல்ல பலன்களைக் காண்பார்கள். நமது நல் வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை சாஸ்திரங்கள். அதை எல்லா வயதினரும் அனுபவித்துப் படிக்கவேண்டும்; பயன் பெறவேண்டும். சக்தி விகடன் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் பிரபல பண்டிதரான ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், அபிஷ்டு என்கிற புனைபெயரில் எழுதிவரும் கட்டுரைகள்தான் இளமையே இனிமை. இன்றைய இளைஞர்களை மனதில் கொண்டு, அவர்களின் ஆக்கபூர்வமான எதிர்காலத்துக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று சாஸ்திரம் சொல்லும் அபூர்வ தகவல்களையும் சேர்த்து, விவரித்து எழுதுகிறார் சாஸ்திரிகள். இனிமையான அந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதிதான் இந்த நூலாக வெளிவந்துள்ளது. நல்லவை எங்கு இருந்தாலும் தேடிச் சென்று படிக்கும் அன்பர்களுக்கெல்லாம் இந்நூல் ஓர் அறிவுப் புதையல்... இளமைப் பொக்கிஷம்!