book

ரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர்

Richard Branson : Don't Care Master

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688147
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், நிறுவனம், தொழில்
Out of Stock
Add to Alert List

‘ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ் செய்யாத முகம். இவரா? விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே! பிசினஸ் உலகின் நிரந்தர ஆச்சரியப் புள்ளி ரிச்சர்ட் ப்ரான்ஸன். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கில்லாடி கிங். பிரமாண்டமான சாதனைகளால் மாத்திரமல்ல அதிரடியான தோற்றத்தாலும் தடாலடி செய்கைகளாலும்கூட பிறரை வாய் பிளக்கச் செய்பவர் ரிச்சர்ட் ப்ரான்ஸன்.

இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள பிசினஸ் மகாராஜாக்கள் அத்தனை பேரிடம் இருந்தும் முற்றிலுமாக வேறுபடுகிறார் ரிச்சர்ட் ப்ரான்ஸன். எம்.பி.ஏ. படிக்கவில்லை. ஆனால் பிசினஸ் வானில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். கையில் பத்து ரூபாய் இல்லாமலே பத்தாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறார். ‘நான் ஒரு சாதாரணமான ஆள்தான்’ என்று தோளைக் குலுக்கிக்கொண்டு இவர் சிரித்தாலும் மிகவும் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

அட, நம்மைப் போன்ற சாதாரண ஒருவரால்கூட இத்தனை உயரத்தை அதுவும் இத்தனை அநாயசமாக எட்ட முடிந்திருக்கிறதே என்னும் வியப்பை உங்களுக்குள் ஏற்படுத்தப் போகிறது இந்தப் புத்தகம்.