book

டயானா ஒரு தேவதை கதை

Diana: Oru Dhevadhai Kadhai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.ந. கண்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686341
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்,
Out of Stock
Add to Alert List

அதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே நான் வேறு ஜாதி என்று நிரூபித்துவிட்டவர் டயானா. பத்தொன்பது வயதில் சார்லஸைக் கைப்பிடித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தார். வெகு சீக்கிரம், எம்.ஜி.ஆர் மாதிரி அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட முடிந்தது அவரால். உலகத் தொழு நோயாளிகள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அத்தனை பேரும் டயானாவுக்கு சிநேகிதமானார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உலகுக்கு முதன் முதலில் எடுத்துரைத்தவர் டயானாதான்.

அவரது தனி வாழ்க்கையில் கிடைத்த ஏமாற்றங்களால் ராணியையும் இளவரசரையும் வெறுப்பேற்றுவதற்காகவே பல ஆண்களைத் துரத்த ஆரம்பித்தார். ஆ! எப்பேர்ப்பட்ட காதல்கள்! டயானா வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அவர்தான் எப்போதும் முதல் பக்கக் கதாநாயகி. துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள். துருவித் துருவிச் செய்தி சேகரித்தார்கள். டயானாவை இறுதிவரை தொடர்ந்தன, காதல்களும் கேமராக்களும். அவர் உயிரைக் குடித்ததும் அவையேதான். மக்களின் இளவரசியாக வாழ்ந்தவர் டயானா. அவரது பிறப்பு முதல் சர்ச்சைக்குரிய மரணம் வரை அத்தனை நிகழ்வுகளையும் துல்லியமாகப் படம்பிடித்து அலசிப் பார்க்கிறது இந்நூல்.