book

சேதுபதிகள் சரித்திரம்

Sedhupathigal sariththiram

₹700
எழுத்தாளர் :பேரா. காவ்யா சண்முகசுந்தரம், எஸ்.எம். கமால்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :725
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இராமநாதபுரத்தில் சேதுவைப் பாதுகாக்க இராமனால் நியமிக்கப்பட்டு சேது சீமையை ஆண்டுவந்த சேதுபதிகளின் சரித்திரத்தைப் பல்வேறு நூல்கள் வாயிலாக முனைவர். எஸ்.எம். கமால் திட்டியுள்ளார். சேதுபதி மன்னர்கள் வரலாறு. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்கள், மன்னர் பாஸ்கர் சேதுபதி, சேதுபதிகளின் கல்வெட்டு, சேதுபதிகளின் செப்பேடு போன்றவற்றை அலசி ஆராயும் நூல் இது.
இதனைப் பேராசிரியர் முனைவர். சு.சண்முகசுந்தரம் சிறந்த முறையில் தொகுத்தளித்துள்ளார்.டாக்டர் எஸ்.எம. கமால் ஒரு வரலாற்று அறிஞர். பல வரலாற்றுக் கருத்தரங் களை நடத்தியவர் இராமநாதபுரத்துக்காரர், அங்கே தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் மற்றும் பனிரெண்டு இலக்கிய வரலாற்று அலமப்புகளின் செயற்குழு பொதுக்குழு மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர். பனிரெண்டு நூல்களின் ஆசிரியர் பசும்பொன் விருது உள்ளிட்ட பத்து விருதுகளைப்பெற்றவர். இதில் இவரது விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மன்னர் பாஸ்கர் சேதுபதி, சேதுபதி மன்னர் வரலாறு. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள், சேதுபதி மன்னர் செப்பேடுகள் ஆகிய ஐந்துநூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.