book

சவாலே சமாளி!

Savale Samaali!

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684583
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

எத்தனை உயரம் ஏறினாலும் ஒரு சிறு சறுக்கல் நம்மை அடியோடு கீழே சாய்த்துவிடுகிறது. நமக்குத் தேவையெல்லாம் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன். பாம்புகளை ஏணிகளாக மாற்றும் சாகசக் கலை. நெருக்கடிகளை எதிர்த்து நிற்கும் தில். தயாரா?

யானை என்ன யானை? டைனோசருக்குக்கூட அடி சறுக்கியிருக்கிறது. சறுக்கியதால்தான் அந்த இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தொழிந்தது. அறிவியல் உணர்த்தும் அதி முக்கிய உண்மை இது. நெருக்கடிகளைச் சமாளிக்கத் தெரியாவிட்டால் காணாமல் போய்விடுவோம்.

எனக்கு மட்டும் ஏன் இத்தனைச் சிக்கல்கள்? என்னை மட்டும் ஏன் எல்லோரும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்? ஏன் என்னை கைவிடுகிறார்கள்?

ஏதாவதொரு நெருக்கடியில் அடுத்த முறை சிக்கிக்கொள்ளும்போது தயவு செய்து இப்படி வருந்தாதீர்கள். காரணம், பிரபஞ்சம் தோன்றிய காலம் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன. இப்படி ஆகிவிட்டதே என்று முடங்கிவிடுவதால் பலனில்லை. தீர்வை நோக்கி நகரும் உயிரினங்களால் மட்டுமே நீண்ட காலத்துக்கு ஜிவித்திருக்க முடியும்.

எல்லோருக்கும் பொதுவான உண்மை இது. யோசித்துப்பாருங்கள். ஓர் அலுவலகத்தில் உயர் பதவியை அடையவிரும்பினாலும் சரி, குடும்ப வாழ்வு உன்னதமாக இருக்கவேண்டுமனாலும் சரி, லட்சியங்கள் நிறைவேற வேண்டுமானாலும் சரி. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம்.

தனி நபர்கள் என்றில்லை. மாபெரும் நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும், விஞ்ஞானிகளும், ஏன் அரசாங்கங்களுமே கூட பெரும் நெருக்கடிகளைக் கடந்தே வந்துள்ளன.

சுவிட்சைப் போட்டால் லைட் எரிவது போல் எதையாவது செய்து நம் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள முடியுமா? முடியும் என்று அழுத்தம்திருத்தமாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது இந்நூல்.

சுவாரஸ்யமான நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். கார்ப்பரேட் பாடங்கள். பெரும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்கள். பயனுள்ள டிப்ஸ். அத்தனையும், அத்தனையும் உள்ளே.