book

உல்ஃபா ஓர் அறிமுகம்

ULFA: Oor Arimugam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684439
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர்
Out of Stock
Add to Alert List

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களிலேயே அளவிலும் பலத்திலும் மிகப்பெறியது உல்ஃபா.யார் இவர்கள்?

இந்தப் பக்கம் ஐ.எஸ்.ஐ. உதவுகிறது.அந்தப் பக்கம் பங்களாதேஷ் அடைக்கலம் தருகிறது.நேற்று வரை பூடான் அவர்களது இரண்டாவது தாயாகமாக இருந்திருக்கிறது.அசாமின் விடுதலை என்கிற உல்ஃபாவின் கோஷத்துக்கு,இந்தியாவுக்கு வெளியே நிறைய ஆதரவுகள்.

வளர்ச்சியடையாத மாநிலங்களில் எப்போதும் இருக்கிற பிரச்னைதான் அசாமிலும்.கூடுதலாக,சுரண்டல் அரசியல்வாதிகள். நிறைய குடியேற்றங்கள்,ஊடுருவல்கள்,வந்து குவியும் அகதிகள்.

அசாமியர்கள் தம் அடையாளத்தையும் உரிமைகளையும் மீட்டு எடுக்கும் முயற்சியில் இறங்கியபோது உருவான பல்வேறு அமைப்புகளில் ஒன்றுதான் உல்ஃபா. மிகக்குறுகிய காலத்தில் ராட்சஸ பலம் பெற்ற அமைப்பு இது.

கோடிக்கணக்கில் பணம்.குட்டிக் குன்றுகளாக ஆயுதங்கள் . முறையான போர்ப்பயிற்சி. அந்நிய சக்திகளின் உதவிகள். இந்திய அரசுக்கு உல்ஃபா தரும் தொடர் தலைவலிக்கு வயது 28. எத்தனையோ ராணுவ முயற்சிகள் செய்துபார்த்தும் இன்றுவரை அடக்கமுடியாமல் இருப்பது ஏன்?

உல்ஃபா, தன் போராட்டங்களுக்குச் சொல்லும் காரணங்களையும் போராடும் முறைகளையும் கூர்ந்து கவனித்தால் அசாம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னையும் புரியும்.