book

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

Vaarthaikalatra Manithanin Vaarthaigal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :8
ISBN :9788183452434
Add to Cart

"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக உள்ளது. 1315 நாட்கள் பூரண மௌனத்தில் இருந்த பிறகு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது, நான் ஏதோ வேறு உலகத்திலிருந்து, புதிதாக வந்திருப்பது போல உணர்கிறேன். உண்மையில், அதுதான் சரி, ஏனெனில், வார்த்தைகள், மொழிகள், கொள்கைகள் நிரம்பிய இந்த உலகத்திற்கும், அந்த மௌன உலகத்திற்கும், கொஞ்சம்கூட ஒற்றுமை இல்லை. இரண்டும் வெவ்வேறு கோணத்தில் இயங்குகிறது. அவைகள் எங்கேயும் சந்திக்கவே முடியாது..." மௌனமாக சுமார் 4 வருட காலம் இருந்து, 1984ம் வருடம் அக்டோபர் மாதம், ஓஷோ தன் விரதத்தை முடித்துக்கொண்டு, பொதுமேடையில், ஆற்றிய முதல் உரையின் முன்பகுதிதான் மேலே தரப்பட்டுள்ளது. அப்பொழுது, தான் வகுத்த மதத்தன்மைதான், ஆரம்பமும், கடைசியாகவும் இருக்கும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின், உண்மையான அர்த்தம் என்ன என்பதை, சில நாட்கள் கழித்து, தன் நெருங்கிய சீடர்கள் அடங்கிய குழுவில், விளக்கினார். மனிதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல், இயற்கையோடு முழுமையாக இயைந்து வாழ்தல் என்ற கொள்கையில், தான் வகுத்த மதமற்ற மதம்தான் முதலும், முடிவும் ஆகும். இந்த முழுமை (Whole) என்பதுதான், தன்னைப் பொறுத்தவரை புனிதமானது (Holy) ஆகும். புனிதம் என்று எதுவும் தனியாக இல்லை. இந்த முழுமையை அங்கீகரித்தலே, அந்தப் புனிதம் ஆகும் என்று விளக்கினார். “என்னுடைய அணுகுமுறை வித்தியாசமானது. நீங்களெல்லாம் சர்ச்சை செய்யும் அளவுக்கு, நான் எந்த கோட்பாட்டையோ, கொள்கை நெறிமுறைகளையோ கொடுக்கவில்லை. ஆகவேதான், என்னுடைய மதம் கடைசியானது என்று சில (Methods) அறிமுகப்படுத்துகிறேன் அவ்வளவுதான். அதை, நீங்கள் விரும்பினால் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிட்டால், விட்டுவிடலாம். ஆனால் அதைப்பற்றி சர்ச்சை செய்ய உங்களால் முடியாது. நீங்கள் முயற்சி செய்தால், அதன் இலக்கைக் கண்டிப்பாக அடையலாம். இதை என் அனுபவத்தில் சொல்கிறேன். ஆகவே, அதுபற்றி எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே, அதைப்பற்றிப் பேச உங்களுக்கு உரிமை கிடையாது. நான் உங்களுக்கு அளிப்பதில் எந்த ரகசியமும் இல்லை. அது ஒரு திறந்த பரிசோதனை. யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். ஜாதி, மதம், கலாச்சாரம், மொழி, நாடு என்ற எதுவும் குறுக்கே வராது" என்றார்.