book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3

Bhagavat Geethai Oru Dharisanam (Part-3)

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

புரிந்து கொண்டால் மட்டுமே போதாது, என்ற சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிரயோகம் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ணன், அர்ஜுனனிடம் கூறிக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்களும் " லாபரேடரி மெதட்ஸ்'', பிரயோகசாலை வழிகள், அவரது எல்லா வாக்குகளும், ஒவ்வொரு சூத்திரமும், ஒவ்வொரு வாழ்வுக்குப் பிரயோகமாக முடியும். ஒரு சூத்திரத்தையாவது பிரயோகம் செய்துவிட்டால், மெல்ல மெல்ல கீதை முழுவதும், படிக்காமலேயே, உங்கள் எதிரே திறந்து விடும். கீதை முழுவதையும் படித்து, ஒருபொழுதும் பிரயோகம் செய்யா விட்டால், கீதை மூடப்பட்ட புத்தகமாகவே இருக்கும். ஒருக்காலும் அது திறக்க முடியாது. அகதத் திறக்க வைக்கும் சாவி-எங்கிருந்தாவது அதைப் பிரயோகம் செய்வதுதான். கீதையில் எதை நீங்கள் படித்தாலும், கிருஷ்ணன் கூறுவதை அப்படியே அறிந்து கொள்வதாக எண்ணாதீர்கள். உங்களால் அறிந்து கொள்ள முடிவதையே நீங்கள் அறிகிறீர்கள். சத்தியத்தின் அனுபவம் இருந்தால், கீதை சத்தியத்தின் திறப்பு ஏற்படுகிறது. சத்தியத்தின் அனுபவம் இல்லை யென்றால், அஞ்ஞானியின் கையில் கீதை இருந்தால், அஞ்ஞானத்தைத் தவிர கீதையில் எந்த அர்த்தமும் வெளிப்படுவதில்லை. வெளிப்பட முடியாது. சாத்திர ஞானம், இரண்டாவது வித ஞானம். முதல் விதமான ஞானம், அனுபவம், சுயானுபவம். முதல்வித ஞானம் இருந்தால், சாத்திரம் மிகவும் ஆழ்ந்த அறிவு பூர்வமானதாகும். முதல் வித ஞானம் இல்லை என்றால், சாத்திரம் குப்பை கூளங்களைப் போல எறிவதற்குகந்ததாகிவிடும். அதற்கு எந்த மதிப்பும் இல்லை.