book

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

Easu Enroru Manithar Erunthar

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேவியர்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682763
குறிச்சொற்கள் :சரித்திரம், இயேசு, சிந்தனை
Out of Stock
Add to Alert List

இயேசு ஒரு மதத்தலைவர் அல்லர். அவர் எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை. தாம் வாழ்ந்த காலத்தில், தாம் சார்ந்த யூத குலத்து மக்களின் வாழ்வைச் சீரமைக்கும் பணியைத்தான் அவர் இடைவிடாமல் மேற்கொண்டார். ஒரு வகையில் அவர் ஒரு கலகக்காரர். இன்னும் சொல்வதென்றால் புரட்சிக்காரர். மௌடீகங்களும் பூர்ஷ்வாத்தனகம் மேலோங்கியிருந்த சமூகத்தில் அவரது அமைதிக் குரலே அப்படித்தான் ஒலித்தது. அவரது பகுத்தறிவு, காலத்துக்கு ஒவ்வாததாக, குலத் துரோகப் பிரசாரமாகப் பார்க்கப்பட்டது. அவருக்கு எதிர்ப்பாளர்கள் மிகுந்ததும் இறுதியில் மரணதண்டனைக்கு அவர் உள்ளாக்கப்பட்டதும் இதனால்தான்.

சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. அவரது சிந்தனைகளும் ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் தத்துவங்களும்கூட அப்போதுதான் உயிர்த்தெழுந்ததாகக் கொள்ளவேண்டும். இயேசுவுக்குப் பிறகுதான், கிறிஸ்தவம் என்னும் புதிய மதக் கோட்பாடு தோன்றியது. மனித குமாரனாகவே தன்னை அறிவித்துக்கொண்ட இயேசு,தேவ குமாரனாக முன்னிறுத்தப்பட்டதும் அப்போதுதான்.

இயேசுவின் வாழ்க்கையை ஒரு மாறுபட்ட கோணத்தில் விறுவிறுப்பாக மறுஅறிமுகம் செய்துவைக்கும் இந்நூல், அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் அப்போதைய அரசியல், சமூகப் பின்னணியையும் சேர்த்தே விவரிக்கிறது.

 

Christ was neither the leader nor founder of a religion. He only took on himself the mission of reforming the lives of his own people, the Jews, during his life time. In a sense, he was a rebel and a revolutionary too. His message of love and peace must have echoed like that of a revolutionary in a society in which materialism and bourgeoisism were the order of the day. His commons sense was seen as anti-Jewish propagnda expressing disloyalty to the community and against the spirit of the time. It was because of this that the number of his opponents increased and he was finally crucified. It is the belief of Christians that Jesus resurrected on the third day after his crucifixion. We must take that as the resurrection of his thinking and moral philosophy also. Only afte Christ, the idea of Christianity came into existence as a new religious doctrine. Christ, who declared himself to be the son of man, was regarded as son of God only after the establishment of Christianity. This book which reintroduces the life of Christ in an interesting manner, analyses the political and social climate of his time also from a different angle.