book

குருதட்சணை

Guruthatchanai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீர.பழனியப்பன்
பதிப்பகம் :சேது அலமி பிரசுரம்
Publisher :Sethu Alami Praasuram
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது வழக்கம்.

குருவானவர், தட்சணையை எதிர்பார்ப்பதில்லை. 'ஸ்ரீஷேமமாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாணவர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக் கொள்வார். மாணவர்

களுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை போதிப்பதில் தான் அவரது கவனம் இருக்கும்; தட்சணையைப் பற்றி கவலைப்பட மாட்டார். ஒரு முனிவரிடம், பாடம் பயின்றார் பகவான் கிருஷ்ணன். பாடம் கற்று முடிந்ததும், 'என்ன குரு தட்சணை கொடுக்க வேண்டும்?' என்று கேட்டார். 'எனக்கு தட்சணை எதுவும் வேண்டாம்...' என்றார் முனிவர். நிர்பந்தப்படுத்தி, 'ஏதாவது கேட்க வேண்டும்...' என்றார் பகவான். 'அப்படியானால், பல ஆண்டுகளுக்கு முன், சமுத்திரத்தில் அடித்துச் செல்லப்பட்ட என் குழந்தைகளை கொண்டு வந்து கொடு; அதுவே, குரு தட்சணை...' என்றார்.