book

சர்வம் ஸ்டாலின் மயம்

Sarvam Stalin Mayam

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682503
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், கட்சி
Add to Cart

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன.

சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சுமத்துகின்றன.

ஆனால், இதே ஸ்டாலினைத்தான் சோவியத் மக்கள் தங்களின் கனவுத் தலைவராகக் கொண்டாடினார்கள். லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவை இரும்புக் கோட்டையாக்கிய விற்பன்னராகக் கருதுகிறார்கள்.

எனில், ஸ்டாலினின் உண்மையான ஆளுமை எப்படிப்பட்டது?

ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டால் மட்டுமே அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், இது அத்தனைச் சுலபமல்ல. காரணம், வேறெந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம்.

ஸ்டாலினின் முழுமையான வாழ்க்கை வரலாறைச் சொல்லும் இந்நூல், சோவியத் ரஷ்யா உருவான கதையையும் சேர்த்தேவிவரிக்கிறது.