| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : |
மற்ற பொது வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக மாற்றியவர். இருப்பத்தோராம் நூற்றாண்டில் புரட்சிக்கு வேறு கோணத்தை கொடுத்தவர்.
இவர் துணிச்சலை பற்றி இரண்டு சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.
1.ஐ.நா சபையில் பூஷ்யை “சாத்தான்” என்று தைரியமாக விமர்சித்தவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள். ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர்.
2.”மூன்று வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்படு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எத்தனையோ எழைகள் வீடில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை இருக்கு அமெரிக்க 500 மில்லியன் டாலர் பணத்தை ஆயுதம் வாங்க செலவு செய்கின்றது. இந்த பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்காவில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் உள்ள ஏழை மக்கள் மறுவாழ்வு பெறுவார்கள்” ஒரு பேட்டியின் போது கூறினார்.
இந்த புத்தகத்தை எடுத்து படித்த முக்கிய காரணம், இதன் மேலட்டையில் காஸ்ரோவுக்கு அடுத்த லத்தின் அமெரிக்க தலைவர் என்று குறிப்பிட்டதால் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சியில் ஒன்றாக பாடினார் என்று படிக்கும் லத்தின் அமெரிக்கர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இருக்கும் வளங்களை உட்கார்ந்து நின்று அழித்த பெருமை அமெரிக்காவை எதிர்க்கும் இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ் .
ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்கர்களுக்கு வயறு பத்திக் கொண்டு எரியும். காஸ்ட்ரோவுக்கு பிறகு ஹியூகோ சாவேஸ் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இரத்த கோதிப்பே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளார் (பூஷ் அரசு சாவேஸ் அரசை கவிழ்க்க சி.ஐ.ஏ ஏஜென்டுக்களான எலியட் ஆப்ரம்ஸ் (Eliot Abrams) மற்றும் ஓட்டோ ரிச் (Otto Reich) நியமித்துள்ளனர்). ஹியூகோ சாவேஸ் கொல்ல யோசனை சொன்னவர் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் (அமெரிக்க பாதரியார்)
இவரை பற்றி சுவையான சில தகவல்கள் :
1.ஜூலை 24,1983, பொலிவரின் 200வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் வகையில் MBR 200 (Bolivar Revoltionary Army 200) தொடங்கினார்.
2.La Causa Radical சுருக்கமாக Causa R (1971ல் தொடங்கப்பட்ட இயக்கம்) சாவேஸ் இயக்கத்துடன் இணைந்தது. ஆனால், புரட்சியின் போது இறுதி கட்டத்தின் ஓதுங்கி கொண்டனர். மனம் தளராமல் புரட்சியில் இறங்கி இரண்டு வருடம் சிறை சென்றார்.
3.அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர்.
4.நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார்.
5.வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான். அவர் வேண்டுக்கொள்ளை ஏற்று OPEC அமைப்பு 25 டாலர் விலையில் இருந்து 60 டாலராக உயர்த்தியது.
6.காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.
7.”மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் ” – மாவோ வழி நடப்பவர்.
தன் நாட்டையும் கவனித்துக் கொண்டு அமெரிக்கவையும் சமாளிக்கும் ஒரு போராளியின் வாழ்க்கையை மருதன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஹியூகோ சாவேஸ் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நன்றி : http://tamilbookreview.blogspot.com/2008/09/blog-post.html