book

ஸ்...!

Ssss…!

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகில்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682282
குறிச்சொற்கள் :சரித்திரம், நிஜம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

கடவுளே பயணம் மேற்கொண்டாலும் திரும்பிவரும் உத்தரவாதம் இல்லாத இடம் அண்டார்டிகா. பனிப்புயல். மனித வாசனையற்ற மாபெரும் நிலப்பரப்பு. எந்தக் கணமும் மரணம். எல்லாக் கணமும் மரணம். 'உலகின் தென் துருவத்தில் பதியும் முதல் மனிதனின் காலடி என் காலடியாகத்தான் இருக்க வேண்டும்' - சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், பல கடல் பயணக்காரர்களின் ஆசை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் இந்த மூன்று கடல் பயணக்காரர்களுக்கும் ஆசை, கனவு, லட்சியம், நினைவு எல்லாமே அதுமட்டுமாகத்தான் இருந்தது.

அவர்களது பயணங்கள் ஒவ்வொன்றும் சாதாரணமானதல்ல. உயிரைச் சுருட்டி பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, தென் துருவத்தைக் குறிவைத்துச் சென்று இலக்கைத் தொட்ட பயணங்கள். வாழ்வுக்கும் மரணத்துக்குமான போராட்டம் இல்லை அது. வாழ்வின் அர்த்தத்துக்கும் அபத்தத்துக்குமான போராட்டம்.

மயிர்க்கூச்செரியச் செய்யும் பயணங்கள்.நெஞ்சு நடுங்க வைக்கும் சம்பவங்கள். கண்காணாத தொலைவில் வெளேரென்றுபரந்துகிடக்கும் அண்டார்டிகா குறித்த அத்தனை விவரங்களையும் ஆதாரபூர்வமாகத்தரும் நூல் இது. எந்த ஒரு த்ரில்லர் நாவலும் உங்களை இதைப்போல் பதைக்கப் பதைக்கப்படிக்கச் செய்யாது!