book

கஜராஜன் குருவாயூர் கேசவன்

Gajarajan Guruvayur Kesavan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உண்ணிகிருஷ்ணன் புதூர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788184760033
குறிச்சொற்கள் :யானை, சரித்திரம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

உலகத்தில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை!  இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது.

மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் கோயிலில் மரித்த - மன்னிக்கவும், சரிந்த - நிமிடம் வரையிலான அதன் வாழ்க்கையை நுட்பமாகவும் அற்புதமாகவும் விவரித்திருக்கிறா நூலாசிரியர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.

குருவாயூர் கேசவன் வெறும் கோயில் யானை அல்ல.  பெரும்பாலான கேரளீயருக்கு அது குருவாயூரப்பனின் இன்னோர் அவதாரமே!  கேசவனும் யானைகளிலே உயர்வான ஒரு வாழ்க்கயை வாழ்ந்து மறைந்திருக்கிறது.  குருவாயூர் கோயிலில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த கேசவனது வரலாறை நூலாசிரியர் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.

வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்து சரிந்திருக்கும் குருவாயூர் கேசவனை மலையாள எழுத்தாளர் உண்ணிக் கிருஷ்ணன் புதூர் மிகவும் அற்புதமாக வார்த்தைகளில் உயிர்த்தெழச் செய்து, என்றென்றைக்குமாக அதை நித்தியப்படுத்தியிருக்கிறார். மலையாள வாசனை துளியும் கெடாமல் அதே நேரம் தமிழர்கள் சரளமாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் விதத்ததில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார்.