book

க்விங்க்

Kwink

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்த் ராகவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680714
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Add to Cart

'நம்பிக்கைதரும் இன்றைய இளம் படைப்பாளிகளுள் ஒருவரான ஆனந்த் ராகவின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

ஆனந்தின் கதைகள் நேரடியாக வாசகர்களுடன் பேசுபவை. பாசாங்கில்லாத, பூடகமில்லாத அவரது கதாபாத்திரங்களை அன்றாடம் நாம் நம் வாழ்வில் சந்தித்தபடிதான் இருக்கிறோம். உறுதி மிக்க புவியின்மீது கால்பதித்து நடக்கும் பாத்திரங்கள் அவை. ஆனந்தின் கதைகளின் ஆதார பலமே இதுதான்.

தமிழின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள் தவிர மேடை நாடகங்களையும் எழுதி வருகிறார். கர்நாடக இசைப் பின்னணியில் இவர் எழுதிய 'ஸ்ருதிபேதம்' நாடகம், மேடையேற்றப்பட்டு வெற்றிகரமான நாடக ஆசிரியர் என்கிற பெயரை இவருக்குப் பெற்றுத்தந்தது.

ஆனந்த் ராகவ் பணிநிமித்தம் பாங்காக்கில் வசிக்கிறார்.

 

In our daily lives, we meet people who are frank and speak their minds. They also take decisions and stick to their convictions. In these stories too, we find such characters. Written in a simple and lucid style, these stories help readers to understand these characters better.