| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||
| ||
ஆசிரியரின் (மசானபு ஃபுகோகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | ||
| ||
மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் : | ||
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | ||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
எனக்கு இந்த புத்தகம் வேண்டும் !!!!! தயவு செய்து வெளியிடுங்கள் !!!!!
உழவில்லாத, செலவில்லாத உற்சாக மகசூல் தொடர்!
உழவில்லாத… செலவில்லாத… (டூ நத்திங்) இந்த வேளாண்மை முறையை நீங்கள் ஏன் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கினீர்கள்?’
இந்தக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், இதைப்பற்றி இதுவரையிலும் எவருடனும் நான் விவாதித்ததில்லை. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள… நாற்பது ஆண்டுகளுக்கு முன்னோக்கிப் போக வேண்டும்!
சௌர்சே : Vikatan
அப்போது… இருபத்தி ஐந்து வயது இளைஞன் நான். ஜப்பான் தேசத்தின் யகோஹாமா கஸ்டம்ஸ் அலுவலகத்தில் தாவர நோய் தடுப்புப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் தாவரங்களில் நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதுதான் என் வேலை. அங்கு அதிர்ஷ்டவசமாக நிறைய ஓய்வு நேரம் கிடைக்கவே, அதை ஆய்வுக் கூடத்தில் செலவு செய்தேன்.
அங்கே… அற்புதமான விஞ்ஞானியான நோயியல் ஆய்வாளர் ஈஷி குருசோவாவின் மாணவனாக இருந்தது என் அதிர்ஷ்டம்தான். வெளியுலகில் அவ்வளவாக அறியப்படாத மனிதராக விளங்கினாலும், நெற் பயிரில் ‘பக்கானே’ என்ற வியாதியை உருவாக்கும் நுண்ணுயிர்களைத் தனியாகப் பிரித்து, சோதனைச் சாலையில் வளர்த்தவர் அவர். முதன்முதலாகத் தாவர வளர்ச்சி ஊக்கியான ஜிப்ரலின் ஹார்மோன் என்பதை, பூஞ்சணக் கலவையிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்தவர். இந்த ஹார்மோனைச் சிறிய அளவில் இளம் நெற்பயிருக்குக் கொடுத்தால், பயிர் மிகவும் உயரமாக வளர்ந்துவிடும். அதிகமாகக் கொடுத்தால், குட்டையாக வளரும். அப்படியரு அபூர்வ தன்மை அந்த ஹார்மோனுக்கு!
ஜப்பானில் எவரும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், வெளிநாடுகளில் இது தொடர்பான தீவிர ஆய்வுகள் நடைபெற்றன. இந்த ஜிப்ரலினை உபயோகித்து, விதையில்லா திராட்சை ரகத்தை உருவாக்கியது அமெரிக்கா (இன்று தமிழ்நாட்டில் உள்ள குக் கிராமங்களில்கூட ஜிப்ராலிக் ஆசிட் ஏக பிரபலம். பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்துகிறார்கள்).
தந்தைக்கு ஈடாக நான் மதிக்கும் குருசோவா என்ற அந்த ஆசானின் வழிகாட்டுதலில் குறுக்கு வெட்டு நுண்ணோக்கியை உருவாக்கினேன். அதைப் பயன்படுத்தி, அமெரிக்க மற்றும் ஜப்பானிய எலுமிச்சை மரத்தின் பட்டைகள், கிளைகள் மற்றும் பழங்களை அழுகச் செய்யும் திரவ நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல்வேறு பூஞ்சண வகைகளைக் கூர்ந்து நோக்கினேன்.
அது இளமையின் துள்ளல் மிகுந்த காலம் என்பதால், எல்லா நேரமும் ஆய்வுக் கூடத்திலேயே அடைபட்டுக் கிடக்கவில்லை. பகல் முழுவதும் வேலை, மாலைவேளைகளில் ஊர் சுற்றுவது என்று வாழ்க்கை கழிந்தது. இந்த நோக்கமற்ற வாழ்க்கையும், அளவுக்கு மீறிய வேலையும், சோதனைச் சாலையில் அடிக்கடி என்னை மயங்கி விழ வைத்தன. இதன் விளைவாக ஒரு கட்டத்தில் கடுமையான குளிர் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எவரும் எட்டிக்கூட பார்க்காத தனி அறையில் அனுமதித்திருந்தனர். தனிமை உணர்வு வாட்டியெடுக்க… இறப்பை நேருக்கு நேர் சந்திக்க நேருமோ என்கிற பயம் ஆட்கொண்டது. உடல் தேறி மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டாலும், மனவாட்டத்திலிருந்து மீள முடியவில்லை.
மரணம் மீதான சந்தேகம் என்னுள் வலியாக வலித்துக் கொண்டே இருந்தது. வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாமல் துறைமுகப் பகுதிகளில் அலைந்தேன். ஓர் இரவில் துறைமுகம் அருகே இருந்த மலைப் பகுதியில் அலைந்த போது, சோர்ந்து போய் ஒரு மரத்தின் மீது சாய்ந்துவிட்டேன். சூரியன் உதித்த வேளையில் நாரை ஒன்று கத்திக் கொண்டே, சிறகுகளை படபடத்தபடி வேகமாக பறந்து மறைந்தது. அக்கணத்தில் என் அனைத்து சந்தேகங்களும், குழப்ப மேகங்களும் சட்டென என்னை விட்டு அகன்றது போன்றதோர் உணர்வு. நான் தீவிரமாகக் கொண்டிருந்த நம்பிக்கைகளும், சாதாரணமாகச் சார்ந்திருந்த அனைத்தும் அப்படியே விடுபட்டன. ‘இந்த உலகில் எதுவுமேயில்லை’ என்பதை அந்த நிமிடத்தில் உணர்ந்த நான், வாய்விட்டு அதை சொல்லிக் கொண்டேன்.
அந்தக் காலை நேர அனுபவத்துக்குப் பின்னர்தான் வாழ்க்கையே மாற ஆரம்பித்தது… வேளாண்மைக்குள் அடி எடுத்து வைத்தேன்.
-புரட்சி பரவும்
Source : Vikatan
கட்டுரைத் தொடர் – பசுமைப் புரட்சியின் கதை- 18
வேளாண்மையின் இறுதி லட்சியம் எது?
சங்கீதா ஸ்ரீராம்
இந்த உலகம் பற்றிய பிளவுண்ட நம் கண்ணோட்டத்தை மாற்றவும் மனித வாழ்வை முழுமையாக்கவும் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகளும் ஆராய்ச்சியாளர்களும் விவசாயத்தையும் ஆராய்ச்சியையும் மேற்கொள்வதற்கு முன்னால், தத்துவவாதிகளாக வேண்டும் என்கிறார் ஃபுகுவோகா தாத்தா. அது என்ன தத்துவம்?
எதையாவது செய்துகொண்டே இருத்தல்
“என் புள்ளய அக்ரி படிக்கச் சொல்லலாம்னு நினைக்கிறேன்! போகப்போகத் தனியார் நிறுவனங்கள்ல நிறைய சம்பளத்துக்கு வேல பார்க்கற ஸ்கோப் நல்லா இருக்குதாமே!”
“சும்மா இருக்குற பத்து ஏக்கருல கத்தாழை போட்டா, நல்ல இலாபம் கிடைக்குமாமே! அதுவும் இயற்கை உரமெல்லாம் போட்டா எக்ஸ் போர்ட்டுக்கு நல்ல மவுசாமே!”
“விதைகளுக்கு நாமதான் கதின்னு ஆகிட்டா, அப்புறம் விவசாயிங்களோட எதிர்காலமும் ஏன் முழு நாட்டோட எதிர்காலமும் நம்ம கையிலதான்!”
இப்படி, இன்றைய சமுதாயத்தில், பணம், அதிகாரம், புகழ் ஆகியவற்றை அடைவதற்கான கருவியாக மாறியுள்ள விஷயங்களுள் வேளாண்மையும் ஒன்று. இந்த மூன்றையும் திட மற்ற இலட்சியங்களாகக்கொண்டு வாழ்நாள் முழுவதும் எதையோ துரத்திக்கொண்டு போகிறோம். அது என்னவென்று கேட்டால் சந்தோஷம், நிம்மதி, பாதுகாப்பு என்றெல்லாம் கூறிக்கொள்கிறோம். ஓடி ஓடிக் களைத்துப்போய் ஓய்வுபெற்றதும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பந்தயத்தில் நன்றாக ஓடி முதலாவதாக வர வேண்டுமென அறிவுரைகள் வேறு கூறுகிறோம். பிறகு மன அழுத்தத்திற்கும் உடல் நோய்களுக்கும் சொத்தையும் நிம்மதியையும் இழந்துவிட்டு, வயதாகி எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மனவலியுடன் இறக்கிறோம். நீங்கள் தேடிச் சென்ற நிம்மதி பந்தயத்துக்கு இறுதியில் உங்களுக்குக் கிடைத்ததா? வெற்றி! வளர்ச்சி! சாதனை! என்னும் சமுதாயத்தின் உரத்த கோஷங்களில் எல்லாம் மூழ்கிப்போகின்றன.
இதுதான் நமது இன்றைய சமுதாயத்தின் ‘எதையாவது செய்துகொண்டே இருத்தல்!’ என்னும் தத்துவம் எனக் கூறலாம். “சும்மா மட்டும் இருக்காதே! எதையாவது கூறிக்கொண்டோ படித்துக் கொண்டோ பார்த்துக்கொண்டோ உற்பத்திசெய்துகொண்டோ இரு. அது யாருக்காவது உதவுகிறதா என்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வோம்!” என்கிறது சமுதாயம்.
ஒன்றுமே செய்யாமல் இருத்தல்
மனித மனம் உழன்றுவரும் இரைச்சல், இல்லாத ஒன்றை உருவாக்கி எதையோ சாதிக்க வேண்டும் என்னும் ஆழமற்ற அகங்கார இலட்சியங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் பார்க்கும் சூழலியல் நெருக்கடி (ecological crisis). இதன் நீட்சிதான் வேளாண் நெருக்கடியும்கூட.
நாம் எதற்காக வாழ்கிறோம்? என்னும் கேள்விக்கு ஆழமான அர்த்தமுள்ள விடை காண இந்தியாவின் பண்டைய நூல்கள் முயல்கின்றன. “உன்னுடைய இளமை, பணம், புகழ் எல்லாம் வெறுமையானது; பொய்யானது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மரத்தடியில் போய் உட்கார்ந்து தியானம் செய். உண்மை எதுவென விளங்கும்” என்று ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் கூறுகிறார். இந்தக் கருத்து பல தத்துவ நூல்களிலும் தரிசனங்களிலும் எதிரொலிக்கின்றன. இதைத்தான் ஃபுகுவோகா, ‘ஒன்றும் செய்யாமல் இருத்தல்’ (பீஷீ-ஸீஷீtலீவீஸீரீ) என்னும் தத்துவமாக வாழ்ந்து காட்டினார். தனது விவசாயத்தையே ஒருவகையான தியானமாகப் பாவித்து, பல்கலைக்கழகத்தில் புத்தகத்தில் படித்த கருத்துகளையெல்லாம் நிசப்தப்படுத்திவிட்டு, இயற்கையிடம் சரணடைந்து, உணர்வுபூர்வமாக அறிந்தார்.
இந்தக் கட்டுரையில் அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி நூலிலிருந்து பல பகுதிகளைத் தருகிறேன். அவர் எழுதிய எளிமையான ஆழமுள்ள இந்த வார்த்தைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஃபுகுவோகாவின் வாழ்க்கைத் தத்துவம் எதிரொலித்த, அளவில்லாமல் அள்ளிக்கொடுத்த அவரது பண்ணையை உலகெங்கிலிருந்தும் கணக்கற்றோர் பார்வையிட்டுள்ளனர். இத்தகைய முதிர்ந்த வாழ்க்கை அனுபவத்தில் உருவாகும் வார்த்தைகளின் சக்திக்கும் ஆழத்துக்கும் ஈடே கிடையாது.
“எந்தவொரு புது முறையையும் உருவாக்கும் வழக்கமான வழிமுறை, ‘இதைச் செய்து பார்த்தால் என்ன? அதைச் செய்து பார்த்தால் என்ன?’ எனப் பல்வேறு வழிமுறைகளை முயன்று பார்ப்பதாகும். இது நவீன வேளாண்மையின் வழிமுறையாகும். இதன் விளைவாக விவசாயிக்கு மேலும் மேலும் வேலை வந்து கொண்டேயிருந்தது.
“என் வழிமுறை நேர் எதிரானது. நான் ஒரு மகிழ்ச்சியான, இயற்கையான வேளாண்மை முறையைக் கண்டுபிடிக்கவும் அதன் மூலம் வேலைப்பளு குறையவும் குறியாயிருந்தேன். இதைச் செய்யாமல் இருந்தால் என்ன? அதைச் செய்யாமல் இருந்தால் என்ன? என்றே என் சிந்தனை சென்றது. நான் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். உழத் தேவையில்லை; செயற்கை உரங்கள் போடத் தேவையில்லை; தழையுரம் போடத் தேவையில்லை; பூச்சிக் கொல்லிகள் தெளிக்கத் தேவையில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேளாண் செய்முறைகள் தேவையற்றவையே.”
சும்மா இருப்பது என்பது, பொறுப்பில்லாமல் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்து, இயற்கை எனக்குச் சோறு போடும்! எனச் சோம்பலுடன் காத்திருத்தல் என்பது பொருளல்ல. அதற்கு மாறாக, அந்த ஆழமான அமைதியில் பிரபஞ்சம் அனைத்துக்கும் பொறுப்பேற்று, தேவையானதை மட்டும் அமைதியாக, சிரத்தையாகச் செய்தல் என்பது பொருள். இதை ஃபுகுவோகா தன் அனுபவத்தின் மூலம் இவ்வாறு விளக்குகிறார்.
“மனிதனின் செயல்நுட்பம் இன்னும் நிலத்துக்குத் தேவைப்படுவ தற்குக் காரணம் என்னவென்றால், முன்பு அதே தொழில்நுட்பத்தால் இயற்கையின் சமச்சீர்மை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, நிலங்கள் அவற்றின் அடிமையாகிவிட்டிருந்ததுதான். . . என் தோட்டத்தில் இருந்த ஆரஞ்சு மரங்களை அப் படியே விட்டு, அவை பூச்சித் தொல்லையால் மடிந்ததிலிருந்து, எது இயற்கையான வழிமுறை? என்னும் கேள்வி என் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதற்குப் பதில் தேடும் முயற்சியில் மேலும் 400 மரங்கள் பலியாயின. இதுதான் இயற்கையான வழிமுறை என உறுதியாகக் கூறும் நிலையை நான் கடைசியாக அடைந்தேன்.
ஒரு மரத்திலுள்ள புதிய மொட்டு கத்திரியால் வெட்டிவிடப்படுமானால், அது ஒரு ஒழுங்கீனத்தை உருவாக்கும். அதைச் சீராக்கவே முடியாது. இயற்கையாக மரங்கள் வளரும்போது கிளைகள் ஒழுங்கோடு இந்தப் பக்கம் ஒன்று, அந்தப் பக்கம் ஒன்று என வளர்கின்றன. அதனால் இலைகளுக்கு ஒரே மாதிரியான சூரிய ஒளி கிடைக்கிறது. அது சீர்குலைக்கப்படும்போது, கிளைகள் தாறுமாறாக வளர்ந்து ஒன்றோடொன்று முறுக்கிக்கொள்கின்றன. சூரிய ஒளிபெற முடியாத இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. பூச்சித் தொல்லை தொடங்குகிறது. அடுத்த வருடம் கிளைகள் வெட்டிவிடப் படாவிட்டால், மேலும் சில கிளைகள் மறைந்துவிடும்.
மரங்கள், தங்கள் இயற்கையான வடிவத்திலிருந்து விலகியிருக்கும் வரை வெட்டிவிடுவதும் பூச்சிகளை அழிப்பதும் தேவையானதுதான். மனித சமுதாயம் இயற்கையிலிருந்து வாழ்க்கையைப் பிரித்துவைத்திருக்கும்வரை பள்ளிப்படிப்பு தேவை தான். இயற்கையைப் பொருத்தவரை பள்ளிப்படிப்பு நியதிக்கு இடமே கிடையாது!
இத்தகைய பகுப்பாய்வு வேளாண்மைக்கு மட்டுமல்ல, மனித சமுதாயத்தின் பிற விஷயங்களுக்கும் பொருந்தும். மக்கள் ஒரு சுகாதாரமற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும்போது அங்கு மருத்துவர்களும் மருந்தும் இன்றியமையாததாகிவிடுகிறது. பள்ளிப்படிப்பிற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் கிடையாது. ஆனால் உலகத்தோடு ஒட்டி வாழ ஒருவன் ‘படித்திருக்க’ வேண்டுமென்ற நிபந்தனையை மனிதகுலம் விதிக்கும்போது, அது தேவையானதாகிவிடுகிறது.”
பயிர் வளர்ப்புக்கும் குழந்தை வளர்ப்புக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. இரண்டுமே ஒரே உயிர் சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தாம் என்று கூறும் ஃபுகுவோகா, இதை எளிமையான உதாரணம்கொண்டு விளக்குகிறார்.
“குழந்தை வளர்ப்பிலும் பெற்றோர் பலர், நான் முதலில் பழத்தோட்டத்தில் செய்த தவறையே செய்கின்றனர். உதாரணமாக, குழந்தைகளுக்கு இசையைக் கற்றுக்கொடுப்பது மரங்களை வெட்டிவிடுவது போன்றே தேவையற்றது. குழந்தைகளின் காதிற்கு இசையைக் கிரகிக்கும் சக்தி உண்டு. ஒரு நீரோடையின் சலசலப்பு, நதிக்கரையில் அமர்ந்திருக்கும் தவளையின் சப்தம், காட்டில் இலைகளின் உரசல் ஒலி போன்ற இயற்கை சப்தங்களே இசை; உண்மையான இசை. அமைதியைக் குலைக்கும் பல வேறுபட்ட ஒலிகள் குழந்தைகளின் தெளிவான காதுகளில் புகும்போது, இசையைப் பாராட்டும் பண்பு தேய்ந்துவிடுகிறது. அது அப்படியே தொடரும் பட்சத்தில், ஒரு பறவையின் அழைப்பை, காற்றின் கீதத்தைப் பாடலாகக் கேட்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.
தூய தெளிவான செவியுடன் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தையால், பிரபலமான பாடலை வயலினிலோ பியானோவிலோ வாசிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதற்கும் அக்குழந்தை ஓர் உண்மையான இசையை ரசிக்கவோ பாடவோ முடிவதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதயம் முழுவதும் பாடலாய் நிறைந்திருக்கும்போது, அக்குழந்தை இசை தேவதையாய்ப் போற்றப்படுகிறது.”
சும்மா இருந்தால் யார் வேலை செய்வது?
“இந்த ‘சும்மா இருத்தலில்’ தேவைப்பட்டால் ஓயாமல் உழைத்தலும் வேண்டும். ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே! இந்தப் பிரபஞ்சம் என் மூலம் வேலை செய்கிறது என்பதறியாமல், நான் செய்கிறேன்! என்னும் அகங்காரத்தை அகற்றாமல் பலர் புதிய உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். நான் இயற்கைக்குத் திரும்புகிறேன்! சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டுக்கு எதிராகச் செயல்படப்போகிறேன் என்றெல்லாம் எதிர்வினையாகச் செய்யும் செயல்களெல்லாம் குறுகிய காலத்தில் நல்லது செய்வதாகத் தென்பட்டாலும், நாளடைவில் அவை உண்மையான தீர்வாக இருக்காது.
“கர்மம் (புற வாழ்க்கையில் செய்யும் வேலை) விகர்மம் (அக வாழ்க்கையில் துறக்கும் வேலையின் பலன்) இரண்டும் சேர்ந்தால் அகர்மம் ஆகிறது” என்கிறது பகவத் கீதை. அகர்மம் என்பது “கர்மம் எதுவுமே செய்வதாய்த் தோன்றாமை, கர்மத்தின் பளுவே தோன்றாமை” என்று வினோபா பாவே அழகாக விளக்குகிறார். “சூரியன் ஒன்றுமே செய்யாததுபோல இருக்கும். அது ஒளிர்வது அதன் இயற்கை. ஆனால் அதன் ஒளிதான் இந்தப் பூமிப்பந்தின் எல்லா அசைவுகளுக்குமே அடிப்படை” என்று கூறும் வினோபா பாவே, நம் அகங்காரத்தை அடக்கினால் நாம் செய்தும் செய்யாதவர் போல ஆகிறோமென விளக்குகிறார்.
நமக்கு என்ன தெரியும்?
‘உலகம் வளர்ச்சியடைந்துவிட்டது. மனிதனின் அறிவு விரிவடைந்துவிட்டது.’ ‘கல்வி மனிதனை உயர்த்துகிறது!’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். ஆனால் நாம் உண்மையில் கூறுவது என்னவென்றால் “உலகில் மனிதனின் மூளை அதிகமாக வேலைசெய்கிறது. நாம் அதிகமாக உழைக்கிறோம். அதிகமான தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறோம். அதிகமாக இயற்கை வளங்களை நுகரும் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறோம்” என்பதைத்தான். இவற்றுக்கும் அறிவு, கல்வி, வளர்ச்சி ஆகியவற்றுக்கும் சம்பந்தமே இல்லை! நம் ஆணவம் அதிகரிக்க அதிகரிக்க, உணர்ச்சிபூர்வமான உயிர் அனுபவம் குறையக் குறைய, உயிர் சக்தியுடனான தொடர்பு துண்டிக்கப்பட துண்டிக்கப்பட, நாம் உண்மையான அறிவுபெறும் ஆற்றலையும் இழந்து கொண்டே வருகிறோம்.
“சில விஷயங்களோடு தங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டதால், அவற்றைப் புரிந்துகொண்டுவிட்டதாக மக்கள் நினைத்துக்கொள்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும். விண்மீன்களின் பெயர்களை அறிந்துவைத்துள்ள விண்ணியலாளனின் அறிவு இது. இலைகள் மற்றும் பூக்களை வகைப்படுத்தத் தெரிந்த தாவரவியலாளனின் அறிவு இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அழகியலை அறிந்துவைத்துள்ள ஓவியனின் அறிவு இது. வானத்தையும் பூமியையும் பச்சையையும் சிவப்பையும் அறிந்துள்ளதானது, இயற்கையை அறிந்துவிட்டதாகாது. விண்ணியலாளன், தாவரவியலாளன், ஓவியன் ஆகியோர் செய்ததெல்லாம் இயற்கையின் ஒரு துளியைப் பதிவுசெய்துகொண்டதும் அதைத் தங்கள் மனநிலைக்கு ஏற்பத் திரித்துக்கொண்டதும்தான். அறிவின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, அவர்கள் இயற்கையில் இருந்து அதிகம் விலகிச் சென்றுவிடுகின்றனர்.”
“எதிலாவது புகுந்து கெடுக்கும் குணமுடைய மனித இனம், ஒரு தவறைச் செய்து அதைச் சீராக்காமல் விட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பாதிப்பான விளைவுகள் ஒன்றாய்ச் சேரும்போது, வரிந்து கட்டிக்கொண்டு அதைச் சரிசெய்ய முனைவதும் அதற்கு வழக்கமே. சரிசெய்யும்முறை வெற்றி அளித்துவிட்டால், அது பெருமையுடன் தன் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்வதும் உண்டு. மக்கள் இதை மீண்டும் மீண்டும் செய்துவருகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தன் வீட்டுக்கூரையை உடைத்து நொறுக்கிவிட்டு, மழை வரும்போது அது ஒழுகத் தொடங்கியவுடன் அவசர அவசரமாக மேலேறி அதைச் சரிசெய்துவிட்டு, ஒரு மாபெரும் தீர்வைக் கண்டுவிட்டதாகக் குதூகலிப்பதற்குச் சமமாக உள்ளது” என்கிறார் ஃபுகுவோகா.
இந்தியாவின் இயற்கை விவசாயிகள்
ஃபுகுவோகாவின் தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டு அவரது பாதையில் பின்தொடர்ந்த இந்திய விவசாயிகள் சிலர் உள்ளனர். அவர்களுள் மிகவும் பிரபலமானவர் மஹா ராஷ்டிராவிலுள்ள 84 வயதாகும் பாஸ்கர் சாவே, இளம் வயதில் ரசாயனங்களை உபயோகித்து முன்னோடி விவசாயியாக இருந்தார். சில ஆண்டுகளிலேயே அவை மண்ணுக்குச் செய்த சேதத்தைக் கண்டு முழுமையாக இயற்கைக்கு மாறினார். இவரது பண்ணையில் 400க்கும் மேலாகக் காய்த்துத் தொங்கும் அபூர்வத் தென்னைமரங்களும் சராசரி 300 கிலோ சுவையான பழங்களைத் தரும் சப்போட்டா மரங்களும் சோற்றுப்பானைக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல! காய்கறிகள், தானியங்கள், பழங்கள், மூலிகைகள் என நூற்றுக்கணக்கான தாவரங்கள் எல்லாம் சேர்ந்து வள ரும் இவரது பண்ணையை, உணவுக் காடு என்றழைக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் பார்வையாளர்களுக்கு அவரது 14 ஏக்கர் பண்ணை ஓர் உண்மையான பல்கலைக்கழகமாக விளங்குகிறது. ‘ஒன்றுமே செய்யாமல்’ இயற்கையோடு வாழும் சாவேஜியை ஆண்டுதோறும் தேடி வரும் லாபம் ரூ. 6 லட்சத்துக்கும் மேல்! இவரது பண்ணையைப் பார்க்க வந்த ஃபுகுவோகா “இது என்னுடைய பண்ணையைவிட மிகவும் அற்புதமாக உள்ளதே!” என்று பாராட்டினாராம்.*
இப்படி விவசாயிகள் சிலர் இருக்க, நகரங்களிலிருந்து பெரிய படிப்புப் படித்துவிட்டு, பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, பணத்தைப் பார்த்துவிட்டு, இயற்கையை நாடிக் கிராமங்களுக்குக் குடிபெயரும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றது.
முன்னோக்கிச் செல்வோம்!
இயற்கை விவசாயம் பற்றிச் சொன்னால், “பின்நோக்கி கற்காலத்துக்குச் செல்லச் சொல்கிறீர்களா?” எனக் கேட்பவர்கள் நம்மிடையில் பலருண்டு. பண்டைய சமுதாயம், அதிலிருந்த ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், மூடநம்பிக்கைகள் பற்றியெல்லாம் எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நவீன மருத்துவத்தின் பயனைப் பெற்றவர்களுள் நானும் என் குடும்பத்தினரும் அடங்குவோம். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுப் பின்னோக்கிப் போவதற்கானதல்ல இந்த வாதம். ஆனால் நம் மூதாதையர்களுக்கு இருந்த ஆழ்ந்த அறிவையும் இயற்கையுடனான இணைப்பையும் நாம் சற்று இரவல் வாங்கிக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கலாமே என்றுதான் கூறுகிறேன்.
மனிதயினத்திற்குப் பொருளும் பொருளாதாரமும் மிகவும் அவசியம்தான். ஆனால் சமுதாய நலனுக்கு அடிபணிந்ததாகப் பொருளாதாரம் இருக்க வேண்டும். இன்று பொருளாதாரத்திற்கு அடிபணிந்துள்ள சமுதாயத்தின் பல கட்டமைப்புகள் மாறினால்தான் உலகம் மாறும். இல்லையென்றால், மேலோட்டமான மாற்றங்களையே செய்துகொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றாகிவிடும்.
இத்தகைய அடிப்படை மாற்றம் அத்தனை எளிதானதல்ல. ஃபுகுவோகா இதற்கு விளக்கமளிக்கிறார்.
“நீங்கள் கேட்கலாம்; ஏன் இந்த உண்மை பரவவில்லை என்று. எனக்குத் தெரிந்த காரணங்களில் ஒன்று, உலகம் வேகமாகச் சிறப்புத் துறையறிவை நோக்கிப் போவதால், எதையுமே ஒரு முழுமையோடு பார்க்க முடியாமல் போய்விட்டது.”
இயற்கை வேளாண்மை என்பது ஒரு மனிதனின் அகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மண் குணமாவதற்கும் மனித ஆன்மா குணமாவதற்குமான செயல்முறை ஒன்றுதான். அவை இரண்டும் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறையையும் வேளாண் முறையையும் நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும்.
ஃபுகுவோகா கூறுவது போல “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனம் முழுமையடையும்வண்ணம் அதைப் பண்படுத்துவதே!”
(முற்றும்)