-
வாழ்வில் நாம் பல்வேறு தேவைகளையும் வசதிகளையும் பெற உழைக்கவும் சேமிக்கவும் வேண்டியது அவசியம். அப்படி நாம் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வதும் கட்டாயம். அதற்கு உதவுவதுதான் இன்ஷுரன்ஸ் பாலிசி. இந்தியாவில் லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் தொடங்கி வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இந்திய அரசாங்கமே அதனிடம் கடன் வாங்கும் அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ந்து, உயர்ந்து நின்றது.
க. நித்ய கல்யாணி எழுதி நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இன்ஷுரன்ஸ் என் சேவகன் மற்றும் மோட்டார் விகடன் இதழில் எழுதிய டேக் இட் ஈஸி பாலிசி கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாக வெளிவந்துள்ளது.
நியூ இண்டியா அஷ்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் மிகுந்த நூலாசிரியர், ஆயுள் காப்பீட்டின் அவசியத்தையும் பயனையும் எடுத்துக் கூறுகிறார். பல நிறுவனங்கள் பாலிசியை விரிவுபடுத்தியுள்ளது பற்றியும், லண்டன் மாநகரமே பெரும் தீ விபத்தால் நிலைகுலைந்து நின்ற சமயம் அதிலிருந்து மீண்டுவர தோன்றியதுதான் இன்ஷுரன்ஸ் திட்டம் என்று அது உருவான வரலாற்றையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
உடல் உறுப்புகளைக் காப்பீடு செய்வது குறித்தும், கார், பங்களா போன்றவற்றை இன்ஷுர் செய்துகொள்வதால் உண்டாகும் நன்மைகளையும், விபத்துக்குள்ளானால் ஏற்படும் நஷ்டத்திலிருந்து அவற்றை ஈடுகட்டுவதன் பயனையும் இந்த நூலில் தெளிவாகவும் அழகாகவும் விளக்குகிறார்.
ஆயுள் காப்பீடு முதல், சேவை பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, ஓன் டேமேஜ் பாலிசி, ஓய்வுக்குப் பிறகும் மாத வருமானம், மணிபேக் பாலிசி, எண்டோ வ்மென்ட் பாலிசி, பிரீமியம் தள்ளுபடி குறித்தெல்லாம் எளிதாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். உங்கள் பாதுகாப்புக்கு இந்த நூல் நல்ல வழிகாட்டி.
-
This book Take it easy policy is written by K.Nithya Kalyani and published by Vikatan Prasuram.
இந்த நூல் டேக் இட் ஈஸி பாலிசி, க. நித்ய கல்யாணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Take it easy policy, டேக் இட் ஈஸி பாலிசி, க. நித்ய கல்யாணி, K.Nithya Kalyani, Varthagam, வர்த்தகம் , K.Nithya Kalyani Varthagam,க. நித்ய கல்யாணி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Nithya Kalyani books, buy Vikatan Prasuram books online, buy Take it easy policy tamil book.
|