book

மூன்றாம் பரிமாணச் சிந்தனை

Moondraam pariman sinthanai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.ஐ. ரவீந்திரன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2007
ISBN :9788189936600
குறிச்சொற்கள் :சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

மனிதனின் மனம் எப்போதும் சிந்தனை வயப்பட்டே இருக்கும். சிந்தனை ஏதுமின்றி வெற்று மனத்தோடு எப்போதும் இருப்பதில்லை. இந்தச் சிந்தனையின் விளைவாகவே தீர்வுகள் கிடைக்கின்றன. அதுவே தவம் மற்றும் தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.

மனிதனின் சிந்தனையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மனம் சிந்திக்கிறது என்றாலும், அது அறிவு மற்றும் உணர்வு ஆகிய இரு வகைகளில் அமைகிறது. அறிவுபூர்வமான சிந்தனை, உணர்வுபூர்வமான சிந்தனை என்ற இந்த இரு வகைகளில் பெரும்பாலும் நம்நாட்டின் பழக்க வழக்கங்களை வைத்துப் பார்க்கும்போது, உணர்வுபூர்வமாக சிந்திப்பவர்களே அநேகர் எனலாம்.

எந்த ஒரு விஷயத்தையும் பற்றிய யோசனைகளை செயலாக்கும்போது, அதை உணர்வின் அடிப்படையில் அமைவதைப் பெரும்பாலும் காணலாம். மேலைநாடுகளின் அடிப்படை அமைப்பைப் பொறுத்து நாம் கண்டால் அறிவுபூர்வமான அதேசமயம் சில நேரங்களில் உணர்வும் கலந்த சிந்தனையைப் பெரும்பாலோர் வெளிப்படுத்துவர்.

இந்த இரண்டையும் மீறி இன்னொரு வகையிலும் நம் சிந்தனையும் செயல்பாடுகளும் அமையும். அதேபோல் நல்லது & கெட்டது; வெற்றி & தோல்வி போன்ற இரட்டைகளைத் தாண்டி இவற்றில் அமையாத இன்னொரு வழியிலும் தீர்வுகள் அமையும்...

இவற்றைப் புரிந்துகொள்வது சற்றே கடினம் என்றாலும், அந்த மூன்றாவது சிந்தனையின் வெளிப்பாடுகள் சில பிரமிக்கத்தக்க வகையில் அமைந்து உணர்வுக்கும் அறிவுக்கும் சவால் விடுவதுண்டு. அப்படிப்பட்ட மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் திறனையும் விளைவுகளையும் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளது.

இக்கட்டில் சிக்கித் தவிக்கும்போது, மரபாக நம் வழிவழிவந்த ரீதியில் சிந்திக்காது, அறிவும் உணர்வும் கலந்த மூன்றாம் பார்வையில் சிந்திப்பதால் ஏற்படும் நன்மைகள், பலன்களை சில உதாரணங்கள் மூலம் இந்நூலில் காணலாம். தீர்வுகளை நோக்கியே பயணிக்கும் நம் சிந்தனைகளுக்கு ஒரு பாதையை வகுத்துக்கொள்ளும் கலையை இந்நூல் காட்டுகிறது.

எதையும் நாம் அணுகும் முறையை வைத்து நம்மை எடைபோட்டுக் கொள்ளும் சுய பரிசோதனைக்கலை இந்த நூலின் உதாரணங்களைப் படிக்கும்போது நமக்குள் வளர்ச்சிபெறும். காரணம், எந்த ஒரு சிக்கலையும் நாம் ஆகிவந்த பழைய முறையில் அணுகுவதற்கும், மூன்றாம் பரிமாணச் சிந்தனையின் வழியில் அணுகுவதற்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவதன் மூலம், நமக்கான சிந்தனை உத்தி முழுதாகக் கிடைக்கிறது.

தன்னம்பிக்கை துளிர்த்து, பயத்தை அறுத்து, சுயத்தை வளர்க்கும் வித்தையை நமக்குள் மேம்படுத்துகிற‌து இந்த‌ நூல்.