book

சுஜாதாட்ஸ்

sujathoughts

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :223
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788189936518
குறிச்சொற்கள் :தகவல்கள், செய்திகள், சம்பவங்கள், விஷயங்கள், சிந்தனை
Out of Stock
Add to Alert List

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக்  கவரும் சிந்தனைக் கோவை

இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை;  படிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை.  ஆகவே, 'சுருங்கச்' சொல்லி விளங்க வைத்தல்' என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன.

அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன.

அதை உள்வாங்கிக் கொண்டுதான் 'விகடன்' குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த 'விகடன் பேப்பர்' நாளிதழில், 'சுஜாதாட்ஸ்' என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார்.

அதே நேரத்தில், அப்போது நடந்த சில விஷயங்களை இன்று வாசிக்கிறபோது வியப்பாகவும் அதர்ச்சியாகவும் இருக்கின்றன.  அந்த சுவாரஸ்யங்களை வாசகர் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.