-
பழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள். கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்... உள்ளே நடுக்கம் என்று அலையும் ஆண்குலம், பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் என்று மயக்கும் மசாலாக் கலவையோடு நகர்கிறது இந்நாவல். துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே, மர்மமான ஒரு பிளாஷ்பேக் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படி இறுதிப் பக்கம்வரை நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்கிற கொத்தமங்கலம் சுப்பு, இன்றைய நடப்புகள் பலவற்றையும் அப்போதே கணித்து ஆச்சர்யமூட்டுகிறார்.
காதல் வசனங்களில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசுகிற வசனங்களின் நறுக்குத் தெறிப்பில், சுவாரஸ்யமான யூத் ஃபிலிம் பார்த்த உணர்வு. பெண்ணின் அழகுக்கு முன் எத்தகைய ஆணும் அடிமைதான் என்று நதியின் ஓட்டம்போல் இயல்பான நடையில் படம்பிடித்துக் காட்டி இருக்கிற கொத்தமங்கலம் சுப்பு, சினிமா அனுபவத்தைப் புகுத்தி, காட்சி அமைப்புகளை திரைக்கதை போலவே நகர்த்திச் செல்கிறார்.
இந்தத் தொடர் விகடனில் வெளியான சமயத்தில் _ 40 வருடங்களுக்கு முன் _ ஓவியங்கள் வரைந்த மாயா, இந்தப் புத்தகம் வெளியாகும்போது, புதிதாக சில படங்களை அதே அழகோடு வரைந்து தந்து, இந்நூலின் ஆக்கத்தில் தன் ஆர்வத்தைக் காட்டியுள்ளார். கொத்தமங்கலம் சுப்பு நூல்களின் வரிசையில் மிஸ் ராதா ஒரு மணிமகுடம்.
-
This book Miss radha is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
இந்த நூல் மிஸ் ராதா, கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Miss radha, மிஸ் ராதா, கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Miss radha tamil book.
|