book

சமணத் தடயம்

Samana Thadayam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நடன. காசிநாதன்;
பதிப்பகம் :மணிவாசகர் பதிப்பகம்
Publisher :Manivasagar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

சமணம்‌ என்பது ஒரு மதம்‌ என்பதைவிட ஒரு வாழ்க்கை முறை 
என்பதே பொருந்தும்‌. கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறையை 
வலியுறுத்துவது சமணம்‌. “இந்தியப்‌ பெருநாட்டின்‌ தொன்மைகளில்‌ 
மதமும்‌ ஒன்று. அதில்‌ சமண. மதம்‌ மிகத்‌ தொன்மையானது. 
இம்மதத்தின்‌ தோற்றத்தை வரையறுத்துக்‌ கூறமுடியவில்லை. 
இத்தொன்மையை வேதங்கள்‌ எழுதப்படுவதற்கு முன்பே ஜைன தாமம்‌ 
இருந்ததென்பதில்‌ ஐயமில்லை” என டாக்டர்‌. 8. ராதாகிருஷ்ணன்‌ 
அவர்கள்‌ கூறுகிறார்‌. தமிழ்நாட்டில்‌ கி.மு. நூற்றாண்டுகளிலேயே 
சமணம்‌ பரவியிருந்ததை அறிந்துக்கொள்ள தொண்டுூர்‌, ஜம்பைக்‌ 
கல்வெட்டுகள்‌ உதவுவதாக ஆய்வாளர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இதன்‌ 
மூலம்‌ விசாகாச்சாரியார்‌ தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே இங்கு 
சமணம்‌ இருந்தது இருக்க வேண்டும்‌ என அறிய முடிகிறது. மேலும்‌ 
தர்மம்‌ குறைந்து விளங்கும்‌ இந்நாளில்‌ தீர்த்தங்கரர்கள்‌ தோன்றுவது 
சாத்தியமில்லை. எனவே அறம்‌ கூறிய அவர்களின்‌ சமவ சரணத்தை 
நினைத்துப்‌ பார்த்து நடக்க வேண்டும்‌ என்பதற்காக தீர்த்தங்கரர்‌ 
களின்‌ கோயில்களை அமைத்தும்‌, இயற்கைப்‌ பாறையில்‌ செதுக்கப்‌ 
பட்ட உருவங்களை வணங்கியும்‌ வருகிறோம்‌. தமிழகத்தில்‌ சமணம்‌ 
2000 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து மக்கள்‌ பின்பற்றும்‌ சமயமாக 
இருந்து வருகிறது. இச்சமயத்தின்‌ கொள்கைகளும்‌, கோட்பாடுகளும்‌ 
ஆணிவேர்களாய்‌ தமிழகத்தின்‌ சின்னஞ்சிறு ஊர்களிலும்‌ 
பரவியிருந்தமைக்கு ஏராளமான கல்வெட்டு, சிற்ப, இலக்கியச்‌ 
சான்றுகள்‌ உள்ளன. இவ்வாறு அமைந்த கோயில்கள்‌, படுக்கை, பாழி, 
குகைத்தளங்கள்‌ சமணப்பள்ளிகள்‌, சிற்பங்கள்‌, ஒவியங்கள்‌ 
செப்புத்திருமேனிகள்‌ ஆகியவற்றை அறிந்துகொள்ள தமிழ்நாடு 
தொன்மை இயல்‌ ஆய்வு நிறுவனம்‌ 'சமணத்தடயம்‌' எனும்‌ நூலை 
வெளிக்கொணர்கிறது. தமிழகத்தில்‌ ஆங்காங்கே உள்ள சமணத்‌ 
தடயங்களை வரலாற்று நோக்கில்‌ வெளிப்படுத்தும்‌ உயர்ந்த 
குறிக்கோளில்‌ இந்நால்‌ தமிழ்நாடு தொன்மை இயல்‌ ஆய்வு 
நிறுவனத்தின்‌ ஐந்தாவது தொகுதியாகும்‌. சிறந்த ஆய்வறிஞர்களின்‌ 
40க்கு மேற்பட்ட கட்டுரைகள்‌ அடங்கிய இந்நாலை எமது 
மணிவாசகர்‌ பதிப்பகம்‌ வாயிலாக வெளியிடுவதில்‌ மிகப்பெருமை 
அடைகிறோம்‌.