book

மிஸ்டர் பார்லிமெண்ட்

Mister Parliament

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123404158
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

மனிதர்கள் எந்திரமாக மாறிவருகிறார்கள். பணம் பணம் என்று அலைகிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் பணம் பண்ணுவதற்காகவே பயன்படுத்துகிறார்கள். நெரிசலான நகரங்களில் மாட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும்போதே செல்லுலார் தொலைபேசியில் பேசிக்கொண்டே போகிறார்கள். '' பேஜர்'' என்ற கருவியைப் பயன்படுத்தித் தகவல்கள் அறியத் துடிக்கிறார்கள். அந்தத் தகவல்கள் அறியத் துடிக்கிறார்கள். அந்தத் தகவல்கள் அதிகமாகப் பணம் பற்றியதாகத்தான் இருக்கும். சமுதாயத்தில் மனிதர்கள் பரபரப்பும் பதற்றமும் கொண்டு வாழும் விலை ஏற்பட்டுவிட்டது. எதையும் படித்து அறிந்து கொள்வதற்கு நேரம் இல்லை. கிடைக்கின்ற சிறிது நேரத்தையும் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளெல்லாம் படிக்கப்படுவதில்லை. நேரம் கிடைத்தால் அந்த நேரத்தில் படிக்க நினைப்பது சிறுகதைகள், துணுக்குள் என்று நிலைமை மாறிக் கொண்டே போகிறது. ஆனந்த விகடன், குங்கமம், இதயம் பேசுகிறது. சிறுகதைக் களஞ்சியம், தாய், தாமரை, செம்மலர், ஜனரஞ்சனி, அக்னி போன்ற இதழ்களில் எழுத்தாளர் ஜெகாதா எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பே மிஸ்டர் பார்லிமெண்ட் என்ற இந்த நூல். கதைகள் பின்னுவதில் வல்லவர் ஜெகாதா. ஜெயகாந்ததாசன் என்று அறிமுகம் செய்து ஜெகாதா என்று தன்னை அடையாளம் காட்டி வாசகர்களின் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.