-
நம் நாட்டில் வெவ்வேறு விதமான வழிபாடுகளை மக்கள் ஆன்மிக நம்பிக்கையின்பாற்பட்டு நடத்தி வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் ஏதோ ஓர் அர்த்தம் பொதிந்திருக்கும். அவற்றுக்கென தனிப்பட்ட கதைகள், வழிபாட்டு முறைகள் போன்றவை, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கான சுவாரஸ்யங்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இரண்டு சஹஸ்ரநாமங்கள் நம் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்றவை. ஒன்று விஷ்ணு சஹஸ்ரநாமம். மற்றொன்று லலிதா சஹஸ்ரநாமம். அதுபோல் இரண்டு பாகவதங்கள் நம் நாட்டில் பிரபலமாக போற்றப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் என்பது விஷ்ணுவின் அவதாரங்களைத் தாங்கிய கதைகள் கொண்டது. குறிப்பாக கிருஷ்ணர் தொடர்பான சின்னச் சின்னக் கதைகள் நிரம்பியது. இன்னொரு பாகவதம், நம் நாட்டில் பரவலாக சிறப்புற வழங்கப்பட்டுவரும் தேவீபாகவதம். இதில்தான் அன்னை பராசக்தி பற்றிய கதைகள் உள்ளன. துர்காதேவி, சாமுண்டாதேவி, மகிஷாசுரமர்த்தினி என்று பல கதைகளைக் கொண்ட தேவீபாகவதத்தின் அடிப்படையில் பல்வேறு சக்தி தலங்கள் நாடெங்கும் அமைந்துள்ளன. சாக்த வழிபாட்டை மையமாகக் கொண்ட தலங்கள், பீடங்கள் அவை.
அந்தவகையில் சமஸ்கிருத மொழியில் உள்ள 51 அட்சரங்களை மையமாகக் கொண்ட 51 அட்சர சக்தி பீடங்கள், நம் நாட்டில் காலங்காலமாக மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. அந்தப் பீடங்களுக்கு நேரில் சென்று, பல குறிப்புகளை துணையாகக் கொண்டு இந்நூலாசிரியர் தொகுத்துள்ளார். நேரில் பார்த்த அனுபவங்களையும், கதைகளையும் எளிய வகையில் தந்துள்ளார்.
இந்நூலில் 51 அட்சர சக்தி பீடங்களுக்குரிய அம்மன் படங்களோடு, அந்த அம்மன் எப்படி இருப்பார் என்கின்ற முழுக் குறிப்பும் வர்ணனைகளும், வரைபட உதவியோடு தரப்பட்டுள்ளன. உக்கிரக ரூபியாக எழுந்தருளி, பக்தர்களின் துன்பங்களைத் தவிடுபொடியாக்கி, மனத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் மலர்ச்சியும் தரும் இந்த 51 அட்சர சக்தி பீடங்களின் சக்திதேவியரை தரிசிக்கும் முழுப்பயனும் இந்நூல் மூலம் கிடைக்கிறது.
-
This book 51 Atsara shakthi peedangal is written by Jabalpur A.Nagaraj sharma and published by Vikatan Prasuram.
இந்த நூல் 51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 51 Atsara shakthi peedangal, 51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா, Jabalpur A.Nagaraj sharma, Aanmeegam, ஆன்மீகம் , Jabalpur A.Nagaraj sharma Aanmeegam,ஜபல்பூர்.ஏ. நாகராஜ சர்மா ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Jabalpur A.Nagaraj sharma books, buy Vikatan Prasuram books online, buy 51 Atsara shakthi peedangal tamil book.
|