book

பாரதி வழி

Bharathi Vali

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :52
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410524
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு
Out of Stock
Add to Alert List

1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவினை நடத்திய ஆசிரியர் கே.பி.எஸ். நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென கல்கியிடம் கேட்டுக்கொண்டார்கள். இதை ஏற்றுக்கொண்ட கல்கி சென்னை சென்றவுடன் எட்டயபுரத்தில் பாரதிக்கு நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டுமென்பதை வலியுறுத்தி அவருக்கே உரிய முறையில் 'கல்கி' இதழில் தலையங்கம் எழுதினார். உலகெங்குமுள்ள பாரதி அன்பர்கள் நினைவுச்சின்னம் எழுப்ப நிதி அள்ளிக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் நிதி போதும் என்று கல்கியே எழுதினார். அந்த அளவிற்கு நிதி குவிந்தது. கடல் கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழ் அன்பர்களின் நிதி ஆதாரத்தைக் கொண்டு உலக மகாகவி பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் நிறுவப்பட்டது. பாரதி மணிமண்டபம் உருவான வரலாற்றின் சுருக்கம்தான் இது.