book

பரமார்த்த குரு கதைகள்

Paramaartha Guru Kathaigal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :78
பதிப்பு :12
Published on :2008
ISBN :8123413416
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்,
Out of Stock
Add to Alert List

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்புவதற்காக ரோம் நகரிலிருந்து தமிழகம் வந்த பெஸ்கி பாதிரியார் தமிழின்பால் ஆழ்ந்த பற்று கொண்டு கற்றுத் தேர்ந்தார். வீரமாமுனிவர் என்னும் பெயர் பெற்றார். நவீன தமிழ் வளர்ச்சிக்கு இவரது பங்கு அரியது. தமிழ் சதுரகராதி, தென்னூல் என்னும் தமிழ் இலக்கண நூல் ஆகிய மொழி நூல்களும் '' தேம்பாணி'' என்னும் காப்பியமும் இவரது திருப்பெயரைத் தமிழ் உள்ளளவும் நிலை நிறுத்துபவை. சாதாரண கிராம மக்களுடன் வாழ்ந்து, பழகு தமிழையும், பழக்க வழக்கங்களையும் கற்ற இவர், அவர்கள் வாழவோடிணைந்த நாட்டுப்புறக் கதைகளையும் , பழமொழிகளையும் தெரிந்து கொண்டார். ''பரமார்த்த குரு கதைகள்'' என்னும் நகைச்சுவை நிரம்பிய வேடிக்கைக் கதைகளை எழுதினார். அக்காலத்தில் தமிழ் கற்க விரும்பும் வெளிநாட்டார்க்குத் துணைப்பாட நூலாக இக்கதைகள் பயன்படுத்தப் பட்டன என்று சொல்லப்படுகிறது. தயத்துக் காகவும், கருத்துக்காவும் இக்கதைகள், பல உலக மொழிகளில் ஆக்கப்பட்டுள்ளன.